Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லியோ படம் நினைச்ச மாதிரி ஓடணும்னா, அவர வந்து பேச சொல்லுங்க! மறைமுகமாக ஸ்கெட்ச் போடும் உதயநிதி

லியோ படத்தை வைத்து விஜய்யை வழிக்கு கொண்டுவர பார்க்கும் உதயநிதி.

leo-udhayanithi

Leo Movie: வரும் அக்டோபர் 19 ஆம் தேதி லியோ படம் வெளியாகுவதால் அதற்கான பரபரப்பு தற்போதே தொடங்கிவிட்டது. வெளிநாடுகளில் டிக்கெட் விற்பனையில் சாதனை செய்து வருகிறது. முக்கியமாக தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு அதிகாலை காட்சி கிடைக்குமா என்ற கேள்வி தற்போது வருகிறது. இதுகுறித்து லியோ படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்ற உதயநிதி அதிரடியான முடிவை எடுத்திருக்கிறார்.

காரணம் ஜெயிலர் படத்திற்கு அதிகாலை காட்சி இல்லாமல் எப்பொழுதும் போல தொடங்கப்பட்டது. இது அந்த படத்திற்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. இது விஜய் படத்திற்கு நடந்து விடக்கூடாது என்று பலர் விரும்புகின்றனர். ஏற்கனவே இந்த வருட தொடக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு போன்ற இரண்டு படங்களின் அதிகாலை காட்சியில் வந்த பிரச்சனைதான் இதற்கு எல்லாம் காரணம்.

Also Read: அவரு தளபதின்னா நீங்க சின்ன தளபதியா.? கூட்டத்தில் வெடித்த சர்ச்சை, வலது கையை கூப்பிட்டு கடித்துக் குதறிய விஜய்

ரசிகர்கள் தங்கள் உயிரை கூட பொருட்படுத்தாமல் சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் அதிகாலையில் ஆட்டம் போடுகின்றனர். முக்கியமாக ரசிகர்களின் உயிர் இழப்பை தடுப்பதற்காகவே சமீபத்தில் வெளியாகும் டாப் நடிகர்களுடைய படங்களின் அதிகாலை காட்சிகளை ரத்து செய்கின்றனர்.

ஆனால் விஜய் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அவரே சென்று உதயநிதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினால் கண்டிப்பாக தர தயாராக இருக்கிறார்கள். நான்கு மணிக்கு இல்லை என்றாலும் ஆறு மணிக்கு காட்சிகளை தருகிறோம் என்று கூறுகிறார்களாம். அதற்கு விஜய் மனசு வைக்க வேண்டும்.

Also Read: லியோ படத்தில் கைவச்ச சென்சார் போர்டு.. தலைவலியில் லோகேஷ், விஜய் கூட்டணி

அப்படி நடந்தால் படத்தின் வசூல் கண்டிப்பாக ஆயிரம் கோடியை எளிதாக எட்டி விடும். ஆனால் விஜய் அரசியலுக்கு வர போகிறார் என தெரிந்ததும் உதயநிதியின் நடவடிக்கையில் நிறைய மாற்றம் ஏற்படுகிறது. வாரிசு படத்தை வெளியிட்டு உரிமையை கூட பெற்று அதற்கு குறைந்த ஸ்கிரீனிங் கொடுத்து படத்தின் வசூலுக்கு பங்கம் விளைவித்தார்.

இதற்கெல்லாம் காரணம் விஜய் அரசியலுக்கு வந்தால் இப்போது ஆளும் கட்சியினருக்கு தான் பெரும் ஆபத்து, அதனால் விஜய்யை சைலன்டாக கார்னர் செய்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது நிச்சயம் அதிகாலை காட்சிக்காக உதயநிதி இடம் விஜய் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை. இருப்பினும் ரசிகர்களை மனதில் வைத்து விஜய் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது விரைவில் தெரிந்து விடும்.

Also Read: டிக்கெட் புக்கிங்கில் ஜெயிலர் சாதனையை முறியடித்த லியோ.. அப்போ 1000 கோடி வசூல் உறுதியா.?

Continue Reading
To Top