பெரிய திமிங்கலத்தை வளைக்க உதயநிதி போடும் திட்டம்.. முடிவுக்கு வரும் கேரியர்

நடிகர் மற்றும் திமுக எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே தற்போது நடிப்பதில் இருந்து விலகி அரசியலில் முழு கவனம் செலுத்தப் போவதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

பாலிவுட்டில் வெளியான ஆர்ட்டிக்கள் 15 என்ற திரைப் படத்தை ரீமேக் செய்து இயக்குனர் அருண் ராஜா காமராஜ், உதயநிதி ஸ்டாலின் தன்யா, ஆரி உள்ளிட்டோர் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை இயக்கி இருந்தார். இதனிடையே இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ், வைகை புயல் வடிவேலு, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து வரும் இத்திரைப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதனிடைய இந்த படத்தை பற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின், நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் நடித்த போது வெறும் பத்து இருபது டேக் மட்டுமே எடுத்து வந்தேன். ஆனால் மாமன்னன் திரைப்படத்தில் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட டேக் போய்க்கொண்டிருக்கிறது.

அந்த அளவுக்கு மாரி செல்வராஜ் அவரின் படத்திலுள்ள டயலாக்குகளுக்கு கூட முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் இயக்குனர் மாரிசெல்வராஜ் 60 நாளில் மாமன்னன் படத்தை முடிப்பதாக தெரிவித்த நிலையில்,ஒரு சீன் கூட உருப்படியாக மா மன்னன் திரைப்படத்தில் அமையவில்லையாம்.

இதனிடையே கண்டிப்பாக மாமன்னன் திரைப்படம் முடிய 60 நாட்களுக்கு மேலாக வாய்ப்புள்ளது என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் மாமன்னன் திரைப்படம் தான் தனது கடைசி திரைப்படமாக இருக்க வாய்ப்பு உள்ளது என்றும், இது சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் தான் யோசித்து வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணமாக தற்போது துணை முதல்வர் பதவிக்காக உதயநிதி ஸ்டாலின் தேர்வாக அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனிடையில் உதயநிதி ஸ்டாலின் தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி விட்டு அரசியலில் முழு கவனம் செலுத்த வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

- Advertisement -