நீதிடா, நேர்மைடா.. நாட்டாமை பாணியில் விஷாலுக்கு செக் வைத்த உதயநிதி

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கும் மேலாக நடிகராகவும்,தயாரிப்பாளாராவும் உள்ளார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான லத்தி திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்று வெற்றிபெற்றது. இப்படம் தமிழை தவிர்த்து தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டு பேன் இந்தியா படமாக வெளியானது.இதனிடையே தற்போது விஷால் தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆயத்தமாகியுள்ளார்

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் விஷால் என்றாலே இப்போது வரை அவர் மீது ஏதாவது பிரச்சனைகள் வந்துக்கொண்டு தான் உள்ளது. அதற்கான காரணம், விஷால் யாரையும் மதிக்காமல் செயல்படுவதே என கோலிவுட் வட்டாரத்தில் பல குற்றச்சாட்டுகள் உள்ளது. அந்த வகையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா, விஷாலின் நடிப்பில் படத்தை எடுக்கலாம் என முடிவு செய்து அட்வான்ஸ் பணத்தையும் அவரிடம் கொடுத்தது.

Also Read: மார்க்கெட் குறைந்தாலும் அநியாயம் பண்ணும் விஷால்.. மாட்டிக்கொண்டு புலம்பும் இயக்குனர்கள்

அந்த பணத்தை வாங்கிக்கொண்ட விஷால் படத்தின் ஷூட்டிங்கிற்கு கூப்பிடும்போது சரியாக செல்லாமல் அலைக்கழித்ததால் அந்த பணத்தை லைகா நிறுவனம் விஷாலிடம் திரும்ப கேட்டது. அதை தர மறுத்த விஷால் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஷாலின் சொத்துக் கணக்குகளை கோர்ட்டில் சமர்ப்பிக்குமாறு தீர்ப்பளித்தது.

இதனிடையே அண்மையில் விஷால் சொத்து கணக்குகளை காட்டிய நிலையில்,தான் மிகவும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும், தன்னிடம் போதுமான பணம் இல்லை என்றும் கூறினார். இதனால் செம காண்டான லைகா தயாரிப்பு நிறுவனம் உதயநிதியை வேறு வழியில்லாமல் அணுகியுள்ளது. உதயநிதியின் பள்ளிக்காலத்திருந்து விஷால் நண்பராக இருப்பதால்,அவ்வப்போது தனக்கு வரும் பிரச்சனைகளை உதயநிதியின் பெயரை சொல்லி விஷால் தன்னை காப்பாற்றிக்கொள்வார்.

Also Read: விஜய் சேதுபதி, விஷால் நம்பி ஏமாற்றமடைந்த கார்த்திக் சுப்புராஜ்.! அதிரடியாக எடுத்த முடிவு

இதனை உதயநிதியிடம் தெரிவித்த லைகா நிறுவனம் விஷாலிடம் தான் பேசுவதாக உதயநிதி கூறியுள்ளார். உடனே விஷாலை அழைத்து பேசிய உதயநிதி, ஒன்று பணத்தை திருப்பி கொடுங்கள், இல்லையென்றால் படத்தில் நடித்து கொடுங்கள். இனி பணம் என்றால் இந்த தேதிக்குள் திருப்பி கொடுத்து விடுமாறும் அல்லது படம் பண்ண போகிறீர்கள் என்றால் இதனை நாட்கள் என கூறி முடித்துக்கொடுங்கள் என விஷாலிடம் ஒரு பத்திரத்தில் எழுதி கையெழுத்து வாங்கியள்ளார் உதயநிதி.

உதயநிதி செயலை கண்ட விஷால் சற்று பிரம்மித்து நின்றாராம். என்னதான் நன்பராக இருந்தாலும் வேலைனு வந்த்துட்டா சாக்கு போக்குகளை சொல்லாமல் சரியாக வேலையை செய்ய வேண்டும் என்பதை விஷாலுக்கு உணர்த்தும் வகையில் உதயநிதி இப்படிப்பட்ட காரியத்தை செய்துள்ளார். உதயநிதியின் இந்த நடவடிக்கை நாட்டாமை பட விஜயகுமாரை போல் உள்ளது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: இந்த வருடம் விஸ்வரூபம் எடுத்த நிறுவனம்.. அரசியல தாண்டி உதயநிதியின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் காரணம்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்