Tamil Cinema News | சினிமா செய்திகள்
இது நிரூபிக்கப்பட்டால் நான் உடனே பாஜகவில் இணைகிறேன். உதயநிதி ஓபன் ஸ்டேட்மென்ட். தமிழிசை சௌந்தரராஜன் பதில் என்னவாக இருக்கும் ?

உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு. க. இசுட்டாலினின் மகனும் ஆவார். ரெட் ஜியன்ட் மூவிஸ் என்ற நிறுவனம் மூலமாக தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர். பின்னர் விநியோகிஸ்தர், நடிகர் என்று மனிதர் கோலிவுட்டில் தற்ப்பொழுது நன்றாக செட் ஆகிவிட்டார். காமெடி படங்களில் தன் ஹீரோ பயணத்தை தொடங்கிய அவர் இன்று காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என்று அணைத்து ஜானர்களிலும் படம் நடித்து விட்டார். விவசாயியாக இவர் நடித்துள்ள சீனு ராமசாயின் “கண்ணே கலைமானே” ரிலீசுக்கு ரெடியாக உள்ளது.
சமீபத்தில் முன்னணி வார பத்திரிகையில் இவரை பற்றிய செய்து ஒன்று வெளியானது. அதனை பாஜக நிர்வாகி சூர்யா தன் ட்விட்டரில் ஷேர் செய்தார்.
ப்ரியங்கா தீவர அரசியலில் நுழைந்த பின் தான் இணையத்தில் வாரிசு அரசியல் சூடு பிடித்தது. குறிப்பாக பி ஜே பியை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் மற்றும் தி மு க கட்சிகளையும், அதில் உள்ளவர்களையும் சுட்டிக்காட்டினார்.
இது போன்ற ஒரு பதிவு தான் உதையை பற்றியதும். இதற்க்கு தான் காட்டமாக அவர் பதில் தந்துள்ளார்.
“கூட்டமாக இருக்கும் முட்டாள்களே. நான் திமுக அல்லது முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர் என்பதை உங்களால் நிரூபிக்க முடிந்தால் நான் பாஜகவில் இணைந்து விடுகிறேன் , அதுவும் நரேந்திர மோடியின் முன்பு. இருப்பதிலேயே கொடுமையான தண்டனை அதுதான். தமிழிசை அக்கா உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
