உதயநிதி ஸ்டாலின்-

ரெட் ஜியன்ட் மூவிஸ் என்ற நிறுவனம் மூலமாக தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர். பின்னர் விநியோகிஸ்தர், நடிகர் என்று மனிதர் கோலிவுட்டில் தற்ப்பொழுது நன்றாக செட் ஆகிவிட்டார். காமெடி படங்களில் தன் ஹீரோ பயணத்தை தொடங்கிய அவர் இன்று காதல், செண்டிமெண்ட்,  ஆக்ஷன் என்று அணைத்து ஜானர்களிலும் படம் நடித்து விட்டார்.

பிரயதர்ஷனுடன் மெகா கூட்டணி-

உதயநிதி ஹீரோவாக, நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் ஹீரோயின்களாக, இயக்குனர் ப்ரியதர்ஷன் எடுக்கும் படத்தை பற்றி நாம் முன்னரே தெரிவித்திருந்தோம். இப்படத்தில் இவர்களுடன் கலையரசன்,  சமுத்திரக்கனி, எம்.எஸ் பாஸ்கர், இயக்குனர் மஹேந்திரன் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

படத்தின்  பெயர் –

இந்நிலையில் இப்படத்தின் பெயர் நிமிர் என்று மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லால் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

நிமிர் : பெயர்க்காரணம்-

அதிகம் படித்தவை:  முத்தமிட்டார், கண்ட இடத்தில் கைவைத்தார் சன் டிவி பிரபலம் மீது பகீர் குற்றச்சாட்டு.! சின்மயி அதிரடி

“நான் இயக்குனர் மகேந்திரனின் மிகப் பெரிய ரசிகன். அவருடைய உதிரிப் பூக்கள் படம் பார்த்து விட்டு அவரிடம் அசிஸ்டன்ட் ஆக சேர வேண்டும் என்று நினைத்தேன், அது நடக்கவில்லை. எனினும் அவரை என் படத்தில் நடிக்க வைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் இப்படத்தில் உதயநிதியின் அப்பாவாக நடித்துள்ளார். அவரிடம் இப்படத்திற்கு டைட்டில் கேட்ட பொழுது அவரே “நிமிர்” என்ற பெயரை கூறினார். படத்தின் மையக்கருவிற்கு ஏற்ற மாதிரியும் அது அமைந்து விட்டது.” என்று ப்ரியதர்ஷன் கூறியுள்ளார்.

மலையாள படத்தின் ரீ மேக்-

நடிகர் பாஹாட் பாசில் நடிப்பில் கடந்த 2016  ஆம் வருடம் வந்த ‘மஹேஷிண்டே பிரதிகாரம்’ என்ற படத்தின் ரீ மேக் ஆகும். இந்தப்படம் மலையாளத்தில் சிறந்த திரைப்படம், மற்றும் திரைக்கதைக்கு என்று இரண்டு தேசிய விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  குட்- பை ஜெர்சி நம்பர் 10 . பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.

படத்தின் கதை

கிராமத்தில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் அப்பாமகன். தன் கடைக்கு அருகில் கடை வைத்திருக்கும் நண்பருக்கு பிரச்சனை ஏற்படும் பொழுது, அதை தட்டிக் கேக்கச் செல்கிறார் நம் ஹீரோ. அப்பொழுது ஏற்படும் கை கலப்பில் அடி வாங்குவதால், ஊரார் மத்தியில் ஹீரோவிற்கு அவமானம் ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு பழி தீர்க்கும் வரை தான் காலணிகள் அணியப்போவதில்லை என்று சபதம் கொள்கிறார் கதாநாயகன். அவர் போட்ட சபதத்தை நிறைவேற்றினாரா இல்லையா என்பது தான் மீதிக்கதை.

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

சமுத்திரக்கனி அவர்கள் இப்படத்தில் வில்லனாக நடிப்பது மட்டுமன்றி, வசனகர்த்தாவாகவும் பணி புரிந்துள்ளார்.

இப்படத்தை நம் கிராமங்களை அழகாக படம் பிடித்து காட்டிய பாரதிராஜா அவர்களுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் இயக்குனர் ப்ரியதர்ஷன்.