Tamil Cinema News | சினிமா செய்திகள்
தடம் இயக்குனருடன் கை கோர்க்கும் உதயநிதி ஸ்டாலின்.. மெகா ஹிட் கூட்டணி, மாஸ் அப்டேட்!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் கதாநாயகனாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.
இவருடைய அடுத்த படத்திற்கான கூட்டணி தற்போது ரெடியாகி விட்டது. மேலும் அருண் விஜய்யின் சூப்பர் ஹிட் படமான ‘தடம்’ படத்தை இயக்கிய மகிழ் திருமேனி தான் உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார்.
இந்தப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கவிருப்பதாகவும், அரோல் கரோலி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
மேலும் மகிழ் திருமேனி இயக்கிய ‘தடம்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதேபோல் உதயநிதி ஸ்டாலினின் ‘சைக்கோ’ படமும் மாஸ் ஹிட் கொடுத்தது.
ஆகவே இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்த சூப்பர் ஹிட் கொடுக்கும் முடிவில் இந்தப் படத்திற்கு Production ‘No 14’ என்ற பெயரில் படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.

udhayanidhi-stalin-cinemapettai
ஆகையால் உதயநிதி ஸ்டாலின், மகிழ் திருமேனி இருவரும் முதன்முதலாக இணைந்துள்ள கூட்டணியில் அட்டகாசமான படம் ஒன்று உருவாகி கொண்டிருக்கிறது என்ற செய்தி ரசிகர்களிடையே தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
