உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தை சீனு ராமசாமி தான் இயக்குகிறார்.

சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம், இப்படை வெல்லும் என இந்த வருடத்தில் மட்டுமே 3 படங்கள் நடித்துவிட்டார் உதயநிதி, வித்தியாசமான ஜானர்களாக தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அடுத்ததாக ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ‘நிமிர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது பாஹத் பாசில் நடித்த ‘மஹிஷண்ட் பிரதிகாரம்’   பாத்தின் ரீ- மேக்.   இப்படத்தின் பெரும்பாலான வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தன் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Vijay-Sethupathi-Seenu-Ramasamy

தர்மதுரை படத்திற்குப் பிறகு சீனு ராமசாமி விஜய் சேதுபதியை  வைத்து ‘மாமனிதன்’ படத்தை இயக்குவார், என்று தகவல்கள் வெளியாகின. பின்னர் தவிர்க்க முடியாத காரணங்களால் அது தள்ளிப்போனது. பின்னர் சீனு ராமசாமி அதர்வா முரளியை வைத்து கிராமத்து பின்னணியில் சஸ்பென்ஸ் திரில்லர் படம் எடுக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் அடுத்து உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பொங்கல் திருவிழா முடிந்து ஜனவரி 19ஆம் தேதி துவங்க உள்ளது.

udhayanidhi-stalin

சீனு ராமசாமியின் நீர்ப்பறவை படத்தை உதயநிதி தான் தயாரித்தார். இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படம் விவசாயம் சார்ந்த படமாம். இதில் உதய் BSc அக்ரி முடித்த பட்டதாரியாக நடித்துள்ளாராம். முழுக்க முழுக்க சீனு ராமசாமி ஸ்டைலில் படம் தயாராகுமாம். இன்னும் ஹீரோயின், இசையமைப்பாளர் போன்ற விஷயங்கள் முடிவாகவில்லை. ஜலந்தர் என்பவர் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகிறார். விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.