Connect with us
Cinemapettai

Cinemapettai

udhayanithi-stalin-entry-in-politics

Tamil Nadu | தமிழ் நாடு

பொது விதிகளை மீறி பிரச்சாரம் செய்ய முற்பட்ட உதயநிதி ஸ்டாலின்.. இரண்டாவது நாளாக தடுத்து நிறுத்தப்பட்ட நாடகம்!

திமுகவில் தான் சொல்வது தான் சட்டம் என்று சீனியர் நிர்வாகிகளை எல்லாம் அடக்கி வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

தற்போது உதயநிதி, நாகை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பட்டி மீன்பிடி துறைமுகத்தில், முறைப்படி அரசின் அனுமதியை வாங்காமல், பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் இரண்டாவது நாளாக இன்றும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனெனில் பிரச்சாரம் என்ற பெயரில் கொரோனா வைரஸ் தொடர்பான விதிமுறைகளை மீறி, நூற்றுக்கணக்கானோரை கூட்டம் கூட்டமாக துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளார் உதயநிதி.

அதுமட்டுமில்லாமல் பிரச்சாரம் செய்யப் போகிறோம் என்ற பெயரில் படகில் ஏற முயற்சி செய்து, அங்குள்ள மீனவர்களுக்கும் தொல்லை கொடுத்து கடுப்பேத்தி உள்ளனர் திமுகவினர்.

எனவேதான், காவல்துறையினர் திமுகவினரை கைது செய்துள்ளனராம்.

மேலும் உதயநிதி இது போன்ற நாடகங்களை நடத்தி தினமும் செய்தியில் முகம் வேற வேண்டும் என ஏதோ செய்கிறார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறு எதிர்க்கட்சியினர் செய்வதன் மூலம் விதிகளை மீறி கொரோனா வைரஸை பரப்புவது யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்று கூறுகின்றனர் மற்ற கட்சியினர்.

எனவே, உதயநிதி பிரச்சாரம் என்ற பெயரில் கபடநாடகம் போடுவதை பார்த்த பலர் திமுகவினரை வசைபாடி வருகின்றனர்.

Continue Reading
To Top