சினிமாவெல்லாம் எனக்கு சைடு பிசினஸ்ங்க.. வித்தியாசமாய் உதயநிதி போடும் புது ஸ்கெட்ச்

அரசியலில் நுழைவதற்கு பலரும் சினிமாவை தேர்ந்தெடுக்கிறார்கள். தங்கள் படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி அதன்மூலம் அரசியலில் களம் காண்கிறார்கள். ஆனால் அரசியல் குடும்பத்தில் இருந்து சினிமாத்துறைக்கு வந்தவர் உதயநிதி ஸ்டாலின்.

இவர் ஆரம்பத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடி  படங்களை கையில் எடுத்த பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். இதன் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானார். இதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நல்ல கதைக்களம் உடைய படங்களை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகிறார்.

கடைசியாக மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான சைக்கோ படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்குகிறார். 

உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் மாமன்னன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இதனிடையே உதயநிதி இன்னும் நான்கைந்து படங்கள் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்துவிட்டு அரசியலின் பக்கம் முழு அளவில் திரும்ப தயாராகிறார்.

உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுக கட்சியின் இளைஞரணி செயலாளராகவும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். உதயநிதி அரசியலில் திறம்பட இருக்க தினமும் கலைஞர், ஆ.ராசா மாதிரியானவர்களின் பேச்சுகள் அரை மணி நேரம் அவருக்கு போட்டு காண்பிக்கப்படுகிறது. 

அதுமட்டுமல்ல பிரபலங்கள் மற்றும் முக்கியமான தலைவர்களை ஸ்டாலின் சந்திக்கும்போது உதயநிதி உடனிருக்க ஏற்பாடு செய்யப்பட்டு அதுவும் தவறாமல் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் உதயநிதி ஸ்டாலின் கைவசம் உள்ள படங்களை முடித்து விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.

Next Story

- Advertisement -