fbpx
Connect with us

இயக்குனர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி சொன்ன உதயநிதி ஸ்டாலின் !

News | செய்திகள்

இயக்குனர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி சொன்ன உதயநிதி ஸ்டாலின் !

கண்ணே கலைமானே

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘நிமிர்’ படத்தினை தொடர்ந்து, தன் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ தயாரிப்பில் சீனு ராமசாமியின் இயக்கத்தில் “கண்ணே கலைமானே” படத்தில் நடிக்க ஆரம்பித்தார் உதயநிதி. ஹீரோயினாக தமன்னா.

Kannae kalaimane

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்திற்கு ஜலேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார், மு.காசி விஸ்வநாதன் எடிட்டர். இப்படம் விவசாயம் சார்ந்த படமாம். இதில் உதய் BSc அக்ரி முடித்த பட்டதாரியாக நடித்துள்ளாராம். ஜனவரி 19ஆம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

சீனுராமசாமி இயக்கத்தில் நடித்தது குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார், ‘‘கண்ணே கலைமானே படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இயக்குனர் சீனுராமசாமியுடன் இந்த படத்தில் பணியாற்றியதன் மூலம் நேரலை சினிமா எடுப்பது பற்றி நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். தமன்னா அளித்த ஆதரவுக்கு என் நன்றிகள். ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசன் உட்பட மற்ற சக நடிகர்கள் மற்றும் யுவன் அவரது குழுவிற்கும் என் நன்றிகள்’’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top