U TURN

கன்னடத்தில் 2016-ஆம் ஆண்டு (விக்ரம் வேதா படப்புகழ்) ‘ஷ்ரத்தா ஸ்ரீநாத்’ நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் ‘யூ டர்ன்’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட ஹாரர் – த்ரில்லர் ஜானர் படம். இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். கன்னடத்தில் ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய பவன் குமாரே இதனை இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் ரெடியாகிறது.

samantha u turn

இப்படத்தில் ஆதி , ராகுல் ரவீந்திரன்,பூமிகா முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். ஆதி போலீஸ் அதிகாரியாக, ராகுல் ரவீந்திரன் சமந்தாவின் நண்பராக, பூமிகா பேயாக நடிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் இப்படம் செப்டம்பர் 13 ரிலீசாகிறது.

samantha in u turn – FLP