கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய ஆண்டிரூ டையை நீக்கி குஜராத் கேப்டன் ரெய்னா மிகப்பெரிய மடத்தனம் செய்தார்.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர், 10வது ஆண்டாக வெற்றிகரமாக துவங்கி நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடக்கும் 23வது லீக் போட்டியில், கொல்கத்தா, குஜராத் அணிகள் மோதுகின்றன.

அதிகம் படித்தவை:  காலா டைட்டிலில் இதை கவனித்தீர்களா, இதெல்லாம் என்ன குறியீடு தெரியுமா?

இதில் ’டாஸ்’ வென்ற குஜராத் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். கொல்கத்தா அணியில் கிராண்ட்ஹோமேவுக்கு பதில் ஷாகிப் அணியில் இடம் பிடித்தார். குஜராத் அணியில் ஆண்டிரு டைக்கு பதில் ஜேம்ஸ் பால்க்னரும், சிவில் கவுசிக்கிற்கு பதிலாக பிரவீண் குமாரும் அணியில் இடம் பிடித்தனர்.

இதில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய ஆண்டிரு டையை நீக்கி, ஆல் ரவுண்டர் பால்க்னரை அணியில் சேர்த்தார். இது அவர் எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை. 4 ஓவர்கள் வீசிய பாக்னர் 38 ரன்கள் வழங்கி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

அதிகம் படித்தவை:  படவாய்ப்பு கேட்டு சென்ற போது என்னை கட்டிலில் தள்ளி பலாத்காரம் செய்துவிட்டார்.! நடிகை பரபரப்பு புகார்.!

ஆனால் டை, இதுவரை குஜராத் அணி கைப்பற்றிய 15 விக்கெட்டுகளில் 7 விக்கெட் சாய்த்துள்ளார். பவுலிங்கில் ஏற்கனவே வீக்காக உள்ள குஜராத் அணி, டைக்கு பதிலாக பேட்ஸ்மேன்களான பின்ச், அல்லது ஸ்மித்தை நீக்கியிருக்கலாம்.