Tamil Cinema News | சினிமா செய்திகள்
2 முறை காதல் தோல்வியால் அர்ஜூன் ரெட்டி நாயகிக்கு நேர்ந்த நரக வேதனை…
அர்ஜுன் ரெட்டி மூலம் செம புகழ் வெளிச்சத்தை அடைந்த ஷாலினி பாண்டே அர்ஜூன் ரெட்டி சமயத்தில் நரக வேதனையில் தவித்ததாக கூறி இருக்கிறார்.
கொழுகொழு முகம், பார்க்க குழந்தைத்தனம் என இருக்கும் ஷாலினி பாண்டேவிற்கு முதல் படமே அமோக வெற்றியை பெற்று தந்தது. அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் அவர் செய்த காதல் இன்னும் பலரால் மறக்கவே முடியாது. முதல் பட நாயகி என்று இல்லாமல் நடிப்பில் சக்கை போடு போட்டு இருக்கிறார். மத்தியப்பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஷாலினியை தெலுங்கு திரையுலகம் களமிறக்கி இருக்கிறது. அர்ஜுன் ரெட்டியில் காதலனுக்காக நெடுந்தூரம் பயணம் செய்வது, வீட்டைவிட்டு வெளியேறுவது, கோபப்படும்போது அறைவது என மற்ற ஹீரோயின்களுக்கு மத்தியில் தனித்து தெரிகிறது ஷாலினியின் ப்ரீத்தி கதாபாத்திரம். இறுதிக்காட்சி உள்பட, எந்தவொரு சூழலிலும் அவருடைய முகத்தில் அந்தக் குழந்தை முகம் விலகவே இல்லை.
இப்படி ஒரு படத்தால் கிடைத்த அங்கீகாரமே ஷாலினிக்கு கோலிவுட்டிலும் செம ரீச் கிடைத்தது. கோலிவுட்டில் பல இயக்குனர்கள் அவரை தமிழ் சினிமாவிற்கு அழைத்து வர பெரும் போராட்டமே நடத்தினர். கடைசியில், ஜி.வி.பிரகாஷ் குமாருடன் ‘100% காதல்’ மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார். ஜீவாவுடன் ‘கொரில்லா’ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தன் முதல் படத்தில் நரக வேதனையை அனுபவித்ததாக ஷாலினி பாண்டே தெரிவித்து இருக்கிறார். உடனே சண்டையா என ப்லீங்கெல்லாம் வேணாம். தன் வீட்டில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்த போது, சண்டை போட்டு விட்டு மும்பை கிளம்பி இருக்கிறார். அங்கு தனது நண்பர்களுடன் தங்கி வாய்ப்பு தேடி வந்தவருக்கு கிடைத்தது தான் அர்ஜூன் ரெட்டி என்னும் மெகா ஹிட் படம். ஷாலினி வாழ்க்கையில் கல்லூரியில் படிக்கும்போதும், சினிமாவுக்கு வந்த பிறகும் 2 முறை காதல் வந்து தோல்வியில் முடிந்தன. காதல் தோல்வியில் சிக்கியதால் கடும் மன உளைச்சலில் இருந்து இருக்கிறார். அப்போது, அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகனுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தபோது நரக வேதனையை அனுபவித்ததாக ஷாலினி தெரிவித்து இருக்கிறார். இந்த மயில யாருப்பா வேணாம் சொன்னது.
