Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதல் முறையாக OTTயில் ஒரே தேதியில் நேருக்கு நேர் மோதும் 2 தமிழ் படங்கள்.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
தியேட்டர்களில் ஒரே நாளில் இரண்டு மூன்று படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது போய் தற்போது OTTயில் அந்த மாதிரி நிலைமை வந்துள்ளது.
இதுவரை OTT இணையதளத்தில் வெளியான தமிழ் படங்களில் எதுவுமே பெரிய அளவு வெற்றியை பெறவில்லை. வெங்கட் பிரபு, வைபவ் நடிப்பில் வெளிவந்த லாக்கப் படம் மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
அதைப்போல் பொன்மகள் வந்தாள், பெண் குயின், டேனி, யாதுமாகி நின்றாய் போன்ற படங்கள் அனைத்துமே படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை குறிப்பிட்ட தேதியில் ஒவ்வொரு படமாக வெளிவந்த நிலையில் தற்போது ஒரே தேதியில் இரண்டு தமிழ் படங்கள் ஒரே தேதியில் வெவ்வேறு OTT தளங்களில் வெளியாக உள்ளன.
இரண்டு படங்களுக்கு இடையில் தியேட்டரில் போட்டியை கிளம்புவது போல தற்போது OTT தளங்களிலும் அந்த ஐடியாவை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் jee5 தளத்தில் விஜய் சேதுபதி நடித்த கா/பெ ரணசிங்கம் படமும், அமேசான் தளத்தில் மாதவன், அனுஷ்கா நடித்த நிசப்தம் படமும் அக்டோபர் இரண்டாம் தேதி வெளியாக உள்ளது.
இந்த இரண்டு படங்களில் எந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதை காண தமிழ் சினிமா உலகமே காத்துக் கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
