வீரம் , வேதாளம் வெற்றியை தொடர்ந்து 3 வது முறையாக அஜித் -இயக்குனர் சிவா கூட்டணி அமைத்துள்ளது.இந்நிலையில் இந்த படம் ( தல57 ) நேற்று பூஜையுடன் தொடங்கியது.

நேற்று மேலும் இரண்டு படங்கள் பூஜையுடன் தொடங்கியுள்ளது,

நடிகர் விக்ரம் பிரபு  பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நேற்று தொடங்கினார்.இந்நிறுவனத்தில் தயாரிக்கும் முதல் படத்துல் விக்ரம் பிரபுவே ஹீரோவாக நடிக்கிறார்.மேலும் இப்படத்திற்கு நெருப்பு டா என்ற பெயர் வைத்துள்ளனர்.இப்பட பூஜையும் நேற்று தொடங்கியது.

மேலும் எங்கேயும் எப்போதும் வெற்றிக்கு பின் ஜெய் அஞ்சலி இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் நேற்று தொடங்கியது இதனை ஜெய் மற்றும் அஞ்சலி தங்கள் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தனர்.