சென்னை : இரட்டை இல்லை சின்னம் விஷயத்தில் போதிய ஆவணங்களை தாக்கல் செய்ய சசிகலா மற்றும் பன்னீர் செல்வம் அணிகளுக்கு தேர்தல் ஆணையம் ஜுன் 16-ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிகாரப் போட்டி காரணமாக சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் என இரு அணிகளாக அதிமுக பிரிந்தது. இதைத் தொடந்து அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என ஓ.பி.எஸ் அணியினர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடமும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.

அதிகம் படித்தவை:  தமிழ் மொழியை அழிப்பதில் மிக கவனமாக இருக்கும் பாஜக அரசு..! ஒரு இனத்தின் வரலாற்றை அழித்தால் தான் அந்த அரசுக்கு நிம்மதி..

இதற்கிடையே ஆர்.கே நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதால், இரட்டை இலை சின்னம் எங்களுக்குதான் சொந்தம் என இருதரப்பும் தேர்தல் ஆணையத்தை அணுகின. இது குறித்தும் விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், அதிமுக கட்சியின் பெயரையும், சின்னத்தையும் முடக்கி வைத்தது. மேலும் வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி இருதரப்பினரும் இரட்டை இலை சின்னம் குறித்த உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தர்.

இதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் தரப்பினர், சுமார் 40 லட்சம் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தனர். ஆனால் சசிகலா தரப்பினர் ஆவணங்களை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டி வந்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனக் கூறி சசிகலா, தேர்தல் ஆணையத்திடம் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதிகம் படித்தவை:  திடீர் திருப்பம்! அதிமுக ஒன்றாகிறது! சசி ராஜினாமா..?

சசிகலாவின் மனுவை ஏற்ற தேர்தல் ஆணையம் , இரு அணிகளும் போதிய ஆவணங்களை தாக்கல் செய்ய ஜூன் 16 -ம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.