அமராவதி: ஆந்திர மாநிலத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய இரு இளம்பெண்கள் மழைக்காக கட்டடத்தில் ஒதுங்கியபோது அவர்களை பலாத்காரம் செய்த காவல்துறை அதிகாரியின் மகன் உள்பட 8 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள டஜாங்கி என்ற பகுதியில் கடந்த 20-ம் தேதி திருவிழா ஒன்று நடைபெற்றது. இதில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். இதில் ஏராளமானோர் கலந்து கொள்வர்.

இந்நிலையில் இந்த கலைநிகழ்ச்சிகளை காண அப்பகுதியைச் சேர்ந்த இரு இளம்பெண்கள் தங்கள் நண்பர்களுடன் வந்திருந்தனர். அப்போது கனமழை பெய்யத் தொடங்கியது.

மழையில் நனைந்தபடி

இதைத் தொடர்ந்து மழையில் நனைந்தபடி வீடு திரும்ப இரு பெண்களும் முயற்சித்தனர். எனினும் அவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை.

அதிகம் படித்தவை:  சல்மான் கானுக்குப் புதிய தலைவலி . சர்ச்சையில் `லவ்ராத்ரி’.!

கட்டடத்தில் ஒதுங்கிய…

இதனால் அங்கிருந்த ஒரு கட்டடத்தில் இருவரும் சென்று தங்கள் நண்பர்களுடன் ஒதுங்கினர். அவர்களை அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதியின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் பார்த்தனர்.

 

 

பலவந்தமாக தூக்கி சென்றனர்

பின்னர் அந்த அரசியல்வாதியின் மகன் உள்பட 8 பேர் கொண்ட கும்பல் அந்த இரு பெண்களையும் பலவந்தமாக மறைவான இடத்துக்கு தூக்கி சென்றனர். இதைத் தடுத்த பெண்களின் நண்பர்களை அடித்து உதைத்தனர்.

அதிகம் படித்தவை:  ப்பா... நந்திதா ஸ்வேதாவா இது.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!

பலாத்காரம் செய்தனர்

பின்னர் அந்த இரு பெண்களையும் 8 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து அந்த இளம் பெண்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸார் அந்த 8 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த கும்பலில் காவல் துறை அதிகாரி ஒருவரின் மகனும் இருந்தது குறிப்பிடத்தக்கது.