அட்லி இயக்கத்தில் விஜய் தன்னுடைய 61வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அதேபோல், தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய 57வது படமான விவேகம் படத்தில் நடித்து வருகிறார்.

இரண்டு படங்களுக்கும் இரண்டு ஒற்றுமை இருக்கிறது. அதில் முதலாவது இரண்டு படங்களிலும் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். 2வது இரண்டு படங்களுமே ஐரோப்பாவில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  ஆமாண்டா… நான் கிறிஸ்துவன்தான்! பொளேர் என்று போட்ட விஜய்!

அஜித்தின் விவேகம், பல்கேரியா, செர்பியா ஆகிய நாடுகளிலும், விஜய்யின் 61வது படம் மெசிடோனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் படமாக்கப்படுகிறது. சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் விவேகம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

அதிகம் படித்தவை:  அஜித்திற்கு வந்த சோதனை? அடுத்து என்ன செய்ய போகிறார்?

இதேபோல், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய்யின் 61வது படம் தீபாவளிக்கு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.