ராட்சத திமிங்கலம் யார்.. கமலுடன் மோதவிருக்கும் 2 பெரிய திமிங்கலங்கள்

கமல் சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடித்து இருப்பதால் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

அந்த வகையில் கமலின் விஸ்வரூப ஆட்டத்தை காணும் ஆவல் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் திரைப்பிரபலங்களுக்கும் இருக்கிறது. இதனால் விக்ரம் படத்திற்கான வரவேற்பு நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார். வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் விக்ரம் திரைப்படம் வெளியிடப்பட இருக்கிறது.

ஆனால் இந்த தேதியில் மூன்று பெரிய மீன்கள் வலை விரிக்கிறது. இதில் எது தங்கமீன் என்று தெரியவில்லை. விக்ரம் படம் வெளியாக இருக்கும் அந்த நாளை குறித்து கிட்டத்தட்ட நான்கு படங்கள் ரிலீசாக இருக்கிறது. இதில் எந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க போவது என்பது விரைவில் தெரிந்துவிடும்.

அந்த வகையில் ஜூன் மூன்றாம் தேதி அன்று வெளியாகும் திரைப்படங்களில் மூன்று பெரிய நடிகர்களுக்குள் கடுமையான போராட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் கமலின் விக்ரம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதையடுத்து அக்ஷய் குமார் நடிப்பில் பாகுபலி ரேஞ்சில் பிரித்திவிராஜ் என்ற ஹிந்தி படம் உருவாகி இருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. இதைத்தொடர்ந்து அஜய் தேவ்கன் நடிப்பில் மைதான் என்ற ஹிந்தி படம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது.

ஃபுட்பால் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் ஹார்பர் திரைப்படத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நான்கு படங்களும் வரும் ஜூன் மூன்றாம் தேதிதான் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதில் கமல், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் ஆகியோருக்கு கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ரேசில் யார் ஜெயிப்பார்கள் என்பதை காண மொத்த திரையுலகமும் காத்துக் கொண்டிருக்கிறது.

Next Story

- Advertisement -