Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் படத்துக்காக அடித்துக்கொள்ளும் இரண்டு நடிகைகள்.. அந்த படத்தை புடிச்சிட்டா நயன்தாராவை ஓரம் கட்டிடுவாங்களாம்!
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடித்தால் போதும். அதனை தொடர்ந்து சில முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைக்கும்.
அப்படித்தான் சமீபத்தில் விஜய்யின் மாஸ்டர் பட வாய்ப்பை பிடித்த மாளவிகா மோகனனுக்கு அடுத்ததாக தனுஷ் பட வாய்ப்பு கிடைத்தது.
தற்போது விஜய்யின் தளபதி 65 படத்திற்காக ஹீரோயின் வேட்டையில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர். இன்னமும் அதிகாரபூர்வமாக தளபதி 65 படத்தைப் பற்றிய எந்தவித அறிவிப்பும் வராததால் அந்த பட வாய்ப்பை எப்படியாவது தட்டிப் பறித்துவிட வேண்டும் என போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் தற்போதைக்கு முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் பூஜா ஹெக்டே மற்றும் ரஷ்மிகா மந்தனா.

rashmika-mandanna-cinemapettai
இந்த இருவருக்கும் எப்படியாவது தளபதி 65 பட வாய்ப்பை பெற்று நயன்தாராவை ஓரம்கட்டி தமிழ் சினிமாவில் நம்பர்-1 நாயகியாக மாறி விட வேண்டும் என கழுகு போல் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

pooja-hedge-cinemapettai
பூஜா ஹெக்டே ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தில் நடித்திருந்தார். ரஷ்மிகா மந்தனா தமிழில் கார்த்தியுடன் சுல்தான் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்னும் படம் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
