Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு நடிகையே கஷ்டம், இதுல இரண்டு பேர்.. வரப்போகும் பிரச்சனைகளை சமாளிப்பாரா இயக்குனர்
தமிழ் சினிமாவில் மிரட்டலாக நடிப்பதில் பெயர் பெற்றவர் ஆகிவிட்டார் நடிகை வரலட்சுமி சரத்குமார். அவரது கணீர் குரல், தோற்றம் மற்றும் நடிப்பை பார்த்து மிரண்டு போன கோலிவுட் இயக்குனர்கள் அவரை தங்களது அடுத்தடுத்த படத்தில் புக்கிங் செய்துள்ளார்கள்.
தற்போதைய நிலையில் தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருபவராக மாறி உள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
கன்னிராசி, வெல்வெட் நகரம், காட்டேரி, பாம்பன், சேஸிங், டேனி, என 6 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை வரலட்சுமி தற்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த படத்திற்கு கலர்ஸ் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ராம்குமார் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

varalaxmi-iniya
இந்த படத்தில் வரலட்சுமியுடன் மிக முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிகை இனியா நடிக்க உள்ளார். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளார்களாம், என்ன கதை என்பது தெரியவில்லை.
