மும்பை: ஜுட்வா 2 படத்தில் நடிக்கும் ஜாக்குலின் பெர்ணான்டஸுக்கும், டாப்ஸிக்கும் இடையே பிரச்சனையாம்.

டேவின் தவான் இயக்கத்தில் அவரது மகன் வருண் தவான் இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் ஜுட்வா 2. இந்த படத்தில் ஜாக்குலின் பெர்ணான்டஸ், டாப்ஸி என்று இரண்டு ஹீரோயின்கள்.

டேவிட் தவான் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் 1997ம் ஆண்டு வெளியான ஜுட்வா படத்தின் இரண்டாம் பாகம் தான் ஜுட்வா 2 என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்தில் கரிஷ்மா கபூர், ரம்பா ஆகியோர் நடித்தனர். ஜுட்வா 2 படத்தில் நடித்து வரும் டாப்ஸிக்கும், ஜாக்குலின் பெர்ணான்டஸுக்கும் இடையே பிரச்சனையாக உள்ளதாம்.

ஒருத்தர் முகத்தில் மற்றொருவர் விழிக்கவே விரும்பவில்லையாம். அதனால் தாங்கள் இருவரும் சேர்ந்து செட்டுக்கு வராதபடி பார்த்துக் கொள்ளுமாறு இயக்குனரிடம் தெரிவித்துள்ளார்களாம்.

டாப்ஸியும், ஜாக்குலினும் வருண் தவானுடன் நன்றாக பழகுகிறார்கள். ஆனால் நடிகைகளுக்கு இடையே தான் ஒத்துப் போக மாட்டேன் என்கிறதாம்.