உயிருக்கு உயிராக நாகேசை நேசித்த இருவர்.. நட்பால் கிடைத்த தேசிய விருது

தமிழ் சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திர வேடம் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நாகேஷ். நடிப்பு ராட்சசன் நாகேஷ் படத்தில் இருந்தால் போதும் என இவருக்காகவே ஒரு ரசிகர் கூட்டம் படங்களை பார்க்க வரும். இவருடைய காமெடி டிராக் என்பது தனியாக வராது.

பொதுவாக பழைய படங்களில் ஹீரோவிற்கு நண்பராகவும், அவருக்கு உதவி செய்பவராகவுமாகவே இவருடைய கதாபாத்திரங்கள் இருக்கும். சில படங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே நடிப்பில் மிஞ்சி இருப்பார் நாகேஷ். அதுமட்டுமல்லாமல் பல படங்களில் இவருடைய கால்ஷீட் வாங்கிய பிறகுதான் நடிகர்களின் ஹீரோக்களை தேர்ந்தெடுப்பார்களாம்.

இவருக்காக சூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோக்கள் கூட வெயிட் பண்ணி கொண்டு இருப்பார்கள். அந்த வகையில் முக்கியமான ஒரு நடிகர். அவரை நேசித்த இரு ஜாம்பவான்கள் எம்ஜிஆர் மற்றும் கமலஹாசன். எம்ஜிஆருக்கும், நாகேஷ்ருக்கும் உண்டான நட்பு மிகவும் நெருக்கமானதான ஒன்று.

எம்ஜிஆர் மற்றும் நாகேஷ் இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி உள்ளனர். நாகேஷ் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தால் அந்த படம் ரிலீசுக்கு முன்பே 60 சதவீத வெற்றி என எம்ஜிஆர் கூறுவாராம். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் சினிமா படப்பிடிப்பு தவிர மற்ற நேரங்களிலும் நெருங்கிப் பழகி வந்தனராம்.

அதேபோல் கமலஹாசனும், நாகேஷும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். கமலஹாசனை, நாகேஷ் படபிடிப்பு இல்லாத நேரத்திலும், தனியாக இருக்கும்போது வாடா, போடா என்று தான் பேசுவாராம் அந்த அளவுக்கு இவர்களின் நட்பு இருந்தது. கமல் தனது சொந்த தயாரிப்புகளில் நாகேஷை தொடர்ந்து நடிக்க வைத்தார்.

கமலஹாசனின் நம்மவர் படத்தில் நாகேஷ் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். நம்மவர் படத்தில் கமல், நாகேசை அவ்வளவு இயல்பாக நடிக்க வைத்திருப்பார். இவர்களின் நட்பு நாகேஷ் தேசிய விருது வாங்குவதற்கு கூட உதவி செய்திருக்கிறது. கமலின் அவ்வை சண்முகி படத்தில் கமலும், நாகேஷும் நண்பர்களாகவே நடித்திருந்தனர். மேலும், கமலின் தந்தையாக வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நாகேஷ் நடித்திருந்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்