தல அஜித் நடிக்கவுள்ள 57வது படமான ‘அஜித் 57’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் அஜித்தே நாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பார் என தெரிகிறது. இந்நிலையில் கோலிவுட்டின் இரண்டு முன்னணி நடிகர்களிடம் இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  அஜித்தின் விவேகம் படத்திற்காக காத்துக் கொண்டிருக்க முடியாது- பிளான் மாறியது

‘தனி ஒருவன்’ வில்லன் அரவிந்தசாமி மற்றும் ‘அஞ்சாதே’ வில்லன் பிரசன்னா ஆகிய இருவரிடம்தான் இயக்குனர் சிவா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இவர்கள் இருவரும் வில்லன் அஜித்துக்கு இடது, வலது கை போன்ற கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  “பிறர்க்கு உணவிட்டு பரிமாறி மகிழ்ச்சியடைபவர்களில்" அஜித்,விஜய்சேதுபதியை பார்த்து நெகிழ்ச்சியடைகிறேன் சீனு ராமசாமி.

அஜித்துடன் காஜல் அகர்வால் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ள இந்த படத்தில் கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இந்த படம் பிரமாண்டமாக தயாராகவுள்ளது.