இந்தியாவை பொறுத்த வரை தற்பொழுது உள்ள சூழலில் அனைவரது கையிலும் ஆறாவது விரலாக கைபேசி வந்து விட்டது. செல் போன்களின் அதிகரிப்பு, குறைவான அல்லது இலவசமான இணைய சேவை என்று பல அதிரடி திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. பேஸ் புக், வாட்ஸஅப்ப், ட்விட்டர் உபயோகிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது.

இந்நிலையில் நேற்று ட்விட்டர் இந்தியா 2017 ஆம் ஆண்டிற்கான ட்ரெண்டிங் தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹாஸ் டேக். மூன்று பிரிவாக பிரித்து அதில் அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட ஹாஸ் டேக் லிஸ்ட் வெளியாகி உள்ளது..

பொழுதுபோக்கு

பாகுபலி 2 , பிக் பாஸ் 11 , மெர்சல்

 செய்திகள் மற்றும் அரசியல்

தீபாவளி, ஜி. எஸ். டி , மான் கி பாத்

விளையாட்டு

சாம்பியன்ஸ் ட்ரோபி, இந்தியா- பாகிஸ்தான், ஐபில், மகளிர் உலகக்கோப்பை.

பொழுதுபோக்கு பிரிவில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளி பிரபாஸின் பாகுபலி முதல் இடத்தை பிடித்துள்ளது. தென் இந்தியாவின் இரண்டு படங்கள் முதல் மூன்று இடத்தில இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல் அதிகமான நபர்கள் யாரை  பாலோ செய்கிறார்கள் என்ற டாப் 10  லிஸ்டயும் வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா.

37 . 5 மில்லியன் நபர்களுடன் நரேந்திர மோடி முதல் இடத்தில உள்ளார். பின்னர் அமிதாப் பச்சன், ஷாருக் கான், சல்மான் கான், அக்ஷய் குமார், அமிர் கான், தீபிகா படுகோனே, சச்சின் டெண்டுல்கர், ஹ்ரித்திக் ரோஷன், விராட் கோலி என்று செல்கிறது அந்த லிஸ்ட்.

என்ன தான் பத்மாவதி படம் பிரச்சனை கொடுத்தாலும், டாப் 10 இல் இடம் பெரும் ஒரே பெண் என்ற பெருமையை தட்டி செல்கிறார் ஏழாம் இடத்தில உள்ள தீபிகா படுகோனே. (22 . 1  மில்லியன்)

இந்த லிஸ்டில் ஒரு தென்னிந்திய பிரபலம் கூட இடம் பெறாதது சற்றே ஆச்சிர்யமாகவே உள்ளது  .