தெலுங்கானா ஆளுநர் ஆனார் தமிழிசை சவுந்தரராஜன்.! டிரெண்டிங்கில் முதலிடம்

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறிக்கொண்டிருந்த பாஜகவின் தலைவி தமிழிசை சவுந்தரராஜன் தற்போது தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக பிரதமர் மோடிக்கும் மற்றும் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதில் முக்கியமானது, இவர் தான் முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது. கடும் உழைப்பிற்கு பாஜக தலைவர்கள் மோடி மற்றும் அமித்ஷா நிரூபித்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

மற்ற மாநிலத்தவர்கள் தமிழகத்தை ஆளும் போது தெலுகானா மாநிலத்தை தமிழ் இனத்தை சேர்ந்த ஒருவர் ஆள்வதில் பெரு மகிழ்ச்சிதான்.

கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல்  தமிழகத்தில் டிவிட்டர் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் பிடித்துள்ளது என்பது ஆச்சரியம்தான். ஏனென்றால் சினிமா செய்திகள் மட்டுமே ட்விட்டரில் முதலிடத்தை பிடிக்கும் ஆனால் தற்போது சினிமாவைத் தாண்டி அரசியலும் ட்ரெண்டாகி உள்ளது.

தமிழிசை தெலங்கானா ஆளுநராகி உள்ள நிலையில், தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாம்.அரசியல் வட்டாரங்கள் பாஜகவின் தலைவர் பதவிக்கு ரஜினிகாந்தை நியமிக்கலாம் என்று செய்தியும் வெளியாகி வருகிறது.

twitter-bjp
twitter-bjp

Leave a Comment