தளபதி ரசிகர்களை மிரட்டும் ட்விட்டர் நிறுவனம்..! வருத்தம் தெரிவித்து பதிவிட்ட பிரபலம்

சமூக வலைதளம் நடிகர்களை விட ரசிகர்கள் தான் அதிகம் உள்ளனர். மேலும் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் பற்றி தகவல்கள் வந்தால் உடனே சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார்கள்.

சிலர் தங்களுக்கு பிடித்த நடிகர்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவே சமூக வலைதளப் பக்கங்கள் உருவாக்கி அதனை பதிவிட்டு அவர்களது விருப்பத்தை தெரிவிப்பார்கள்.

பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்ற பக்கங்களில் விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் அதிகமான பக்கங்களை வைத்துள்ளனர்.

இவர்கள் இருவரும் அடிக்கடி சமூக வலைதளப் பக்கத்தில் சண்டை போட்டுக் கொண்டாலும் பிரச்சனை என்று வந்தால் ஒன்றுகூடி தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவார்கள்.

தற்போது ட்விட்டர் நிறுவனம் ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் பல விஜய் ரசிகர்களின் ட்விட்டர்பக்கங்களில் இருந்து நீக்கியது. இது விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு மெர்சல் படத்தை தயாரித்த ஹேமா ருக்மணி இந்த செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் மீதமிருக்கும் ரசிகர்களின் பக்கங்கள் கண்காணிக்கப்படும் என்றும் யாராவது அந்தப் பக்கங்கள் குறித்து அதிகமான ரிப்போர்ட் கொடுத்தால் உடனே அந்த படத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சமீப காலமாக சமூக வலைதளப் பக்கங்கள் அதிகம் மூடப்பட்டு வருகின்றன. இதனால் உண்மையான தகவல்கள் பதிவிடவும் முடியாத சூழ்நிலைக்கு பலரும் தள்ளியுள்ளனர்.

Leave a Comment