fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

உதயநிதியின் சைக்கோ எப்படி.? ட்விட்டர் விமர்சனம்.. வீடியோ

u-stalin

Videos | வீடியோக்கள்

உதயநிதியின் சைக்கோ எப்படி.? ட்விட்டர் விமர்சனம்.. வீடியோ

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படங்களிலேயே சைக்கோ படம் தான் மிகச்சிறந்த படம் என்கிறார்கள் ரசிகர்கள். மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடித்துள்ள படம் சைக்கோ. இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் ஜனவரி 24ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று வெளியாகி உள்ளது.

இப்படம் குறித்து ரசிகர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

விக்னேஷ் சிவா என்பவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் உதயநிதி ஸ்டாலினின் கேரியரில் சைக்கோ தான் சிறந்த திரைப்படம்எ ன்று பதிவிட்டுள்ளார். எமோசன், டிராமா, இயக்கம், அற்புதமான நடிப்பு என பாடம் வாவ் என சொல்ல வைக்கிறது என்று கூறியுள்ளார். குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் சைக்கோ என்று பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/VigneshhSK/status/1220539891400040448?s=20

சுமோ என்பவர் இப்படம் குறித்து கூறுகையில், குற்றவாளி மற்றும் இதயத்தில் சுமைகளைச் சந்திப்பவர்களுக்கு இந்த திரைப்படம் முக்கியமானதாக இருக்கலாம். ஏனெனில் இதற்கான பதில் திரைப்படத்தில் உள்ளது, இந்த தலைமுறையில் உள்ளவர்கள் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நம்புகிறேன். இறுதியாக இயக்குனர் மைஸ்கின் தான் உண்மையான சைக்கோ என்று பதிவிட்டுள்ளார்.

செந்தில்குமார் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், முதல் பாகம் செம்ம திரில்லர். இரண்டாம் பாகம் அற்புதமான ஸ்கிரீன் பிளே. எதிர்பார்க்காத இண்டர்வெல் என்று கூறியுள்ளார்.

நவீன்குமார் என்பவர் தனது பதிவில் முதல் பாதி மிருகத்தனமான கொலைகள் மற்றும் இருண்ட நகைச்சுவையுடன் முடிவடைகிறது. இரத்தக்களரியாக இருந்தாலும் நன்றாக எடுத்துள்ளார்கள். படத்திற்கு பிஜிஎம் மிகப்பெரிய பிளஸ் .அற்புதமான படம் சைக்கோ என்று என்று கூறியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top