Connect with us
Cinemapettai

Cinemapettai

Sivakarthikeyan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் மைல்-கல், அறம் பாராட்டிய சிவகுமார், பிரபுதேவா வெளியிடும் ட்ரைலர்- லேட்டஸ்ட் அப்டேட்.

‘வனமகன்’ படத்தை தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்து ரிலீசாகும் படம் ‘கரு’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில்  நாயகியாக  சாய் பல்லவி, நான்கு வயது குழந்தையின் அம்மாவாக  நடிக்கிறார். படத்தில் சாய் பல்லவியுடன் நாக சௌர்யா, வெரோனிகா அரோரா ஆகியோரும் நடிக்க,விக்ரம் வேத புகழ் சாம்.சி.இசை அமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தின் டிரைலர் நாளை (18-11-17)  மாலை 5 மணிக்கு வெளியாகவிருக்கிறது. இந்த டிரைலரை பிரபு தேவா வெளியிடுகிறார்.

கரு கலைப்பு சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதையை கொண்ட படம் இது என்று கூறப்படுகிறது. இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது . மேலும் இப்படத்தில்  சாய் பல்லவி தன் சொந்த குரலில் டப்பிங்  பேசியுள்ளார்.

அறம் படத்தை பாராட்டிய சிவகுமார்

கடந்த வாரம் வெளியாகி பத்திரிகையாளர்கள் மற்றும் திரைத்துரையினர் பாராட்டுக்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் நயன்தாராவின் ‘அறம்’. கோபி நயினார் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து பலத்த பாராட்டுகளும், வரவேற்பும் குவிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிவகுமார் அவர்கள் அறம் படம் பார்த்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்து போக இயக்குனர் கோபி நைனார் மற்றும் அந்த டீம் நபர்களை பார்க்க வேண்டும் என்ற தான் ஆவலை கூறியுள்ளார். உடனே அவர்களும் சென்று சிவகுமாரை மீட் செய்துள்ளனர்.

‘25 வருஷம் ஆச்சு,  இப்படி ஒரு படம் பார்த்து. அசத்திடீங்க’ என்று கூறி கோபி நயினாரையும் அவரது படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார். சிவகுமாரின் இந்த பாராட்டால் ‘அறம்’ படக்குழுவினர் மேலும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்!

சிவ கார்த்திகேயனின் ட்விட்டர் அக்கௌன்ட்

நடிகர் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படம்  நடித்து முடித்து விட்டு, அதன் ப்ரோமோஷன் வேளைகளில் பிஸியாக உள்ளார். படம் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு விடுமுறையை குறிவைத்து வெளிவர வாய்ப்பு அதிகமாக உள்ளது. இறுதிகட்ட பணிகள் தற்பொழுது விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் 4 மில்லியன் பாலோ யர்ஸ் என்ற மைல் கல்லை கடந்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துள்ள அவர் ” 4 மில்லியன் ட்வீட் உள்ளங்கள் இங்கு. அனைத்து சகோதர, சகோதரிகள் மற்றும் என் நலம் விரும்பிகளுக்கு என் மனமார்ந்த நன்றி ” என கூறியுள்ளார். 24 ஏ.எம்.ஸ்டுடியோஸும் “40  லட்சம் இதயங்களை வென்ற எங்கள்  வேலைக்காரன் சிவகார்த்திகேயனுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.” என்று டீவீட்டியுள்ளனர் தங்கள் பங்கிற்கு

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top