இந்த வாரம் ட்விட்டரில் நடந்த சில சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பே இந்த பதிவு..

விக்ரம் பிரபு

நம் இலயத்திலகம் பிரபுவின் மகன். 2012ல் கும்கி படம் வாயிலாக ஹீரோ ஆனவர். அதன் பின் பார்த்தால், ஆறு மாதத்திற்கு ஒரு படம் வீதம், கண்டிப்பாக ரிலீஸ் ஆகிவிடுகிறது. கடைசியாக வந்த நெருப்பு டா படம் மூலமாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். தன் ஆரம்ப காலம் முதலே பெரிதாக கெட்- அப் மாற்றம் செய்யாதவர் இவர். தற்பொழுது படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்பதாலா, இல்லை வித்தியாசமாக எதுவும் முயற்சி எடுக்கிறாரா என்று தெரியவில்லை. தன் அடுத்த படத்தின் புது லுக்கை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

#VikramPrabhu

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

ஐஸ்வர்யா ராஜேஷ்

நம்ப சென்னை பொண்ணு. எத்திராஜ் கல்லூரியில் பி. காம் முடித்தவர். மானாட மயிலாட வாயிலாக கலைஞர் டிவியில் தடம் பதித்தவர். பின்னர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்றவர் . ஒருபுறம் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக காக்கா முட்டை படத்தில், மறுபுறம் கிராமத்துப் பெண்ணாக தர்மதுரை படத்தில் கலக்கியவர்.

நடிகைகள் என்றாலே தங்கள் வயதை வெளியே சொல்ல மாட்டார்கள் என்பது எழுதப் படாத நியதி. ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் அது போன்ற சிந்தனையில் இருந்து மாறுபட்டவர். கதாபாத்திரத்தை மட்டும் பார்த்து நடிக்கும் ஒரு நடிகை. வயதை பற்றி யோசிக்கத்தவர்.

இவர் சமீபத்தில் தான் அத்தை ஆன விஷயத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Aishwarya Rajesh

குஷ்பு

தல சால்ட் அண்ட் பெப்பர் லுக் பற்றி இவரிடம் கேட்ட பொழுது, ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளோனி போல் உள்ளார் என்று கூறியவர் தான் நம் குஷ்பு.

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ரசிகர் ‘ மேடம் தல அஜித் பற்றி சொல்லுங்கள் .’ என்ற கேள்வியை கேட்டார்.

இதற்கு பதிலாக குஷ்பு ” என்னுடைய ஜார்ஜ் க்ளோனி” என்று ட்வீட் போட்டுள்ளார்.

இந்த டீவீட்டை பார்த்து ஷாலினி என்ன சொல்வார்கள் என்று தான் தெரியவில்லை.

பாத்திமா விஜய் ஆண்டனி

இன்று காலை விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் அண்ணாதுரை படத்தின் பாடல் வெளியீடு நடைபெற உள்ளது. படமும் நவம்பர் 30 ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் இரட்டை வேடங்களில் அவர் நடித்துள்ளார்.

ஏற்கனவே சைத்தான் படத்தின் முதல் பத்து நிமிட காட்சியை வெளியிட்டார் விஜய் ஆண்டனி. இப்படத்திற்கும் இசை வெளியீட்டின் பொழுது முதல் 10 நிமிட காட்சி திரையிடுவோம் என்று அவர் மனைவி மற்றும் தயாரிப்பாளரான பாத்திமா விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.