jo

ஜோ

ஜோதிகா நாச்சியார் படத்தின் வெற்றியை தொடர்ந்து மொழி படத்தை இயக்கிய ராதாமோகன் அவர்களுடன் இணையவுள்ளார். சமீப காலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உள்ள ஸ்கிரிப்ட் தான் இவர் தேர்ந்தெடுக்கிறார். அந்த வகையில் இவர் நடிக்கும் இப்படம் ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த ” தும்ஹாரி சுலு” என்ற படத்தின் ரீமேக் தான். இப்படத்தை தனஞ்சயன் BOFTA Media Works சார்பில் தயாரிக்கிறார்.

அதிகம் படித்தவை:  வெப் சைட் நடிகையான தேஜஸ்வி

ஏற்கனவே  இந்த படத்தின் தலைப்பை கண்டுபிடிப்போருக்கு ஒரு நாள் ஜோதிகாவின் ஷூட்டிங்கில் பங்கேற்கும் வாய்ப்பு என்று அறிவித்தனர். அதற்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அதன் பின்னர் தான் ராதாமோகன்
இயக்கம் படத்திற்கு காற்றின் மொழி தான் தலைப்பு என்று அறிவித்தனர். இந்த தலைப்பு மொழி படத்தில் வரும் பாடலின் வரி ஆகும்.

அதிகம் படித்தவை:  biggboss-ல் பிந்து மாதவிக்கு இவ்ளோ சம்பளமா?
Kattrin Mozhi

இந்நிலையில் தற்பொழுது ஜோதிகாவின் அக்கா வேடத்தில் நடிக்க 35 – 45 வயதில் பெண் இரட்டையர்கள் தேவை என்ற விளமபரத்தை செய்துள்ளனர். மேலும் தங்களின் போட்டோ அனுப்ப வாட்ஸ் அப் நம்பரையும் தந்துள்ளார்.

Kattrin Mozhi

மேலும் ஒரிஜினல் வெர்ஷனில் நடித்த பெண்மணிகளின் போட்டோவையும் அதில் பகிர்ந்துள்ளார்கள் படக்குழுவினர்.