Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

“நீதான் தைரியமான பொண்ணாச்சே, பேர சொல்லித்தான் பாரேன்” வரலட்சுமிக்கு குவியும் ட்வீட்டுகள்!

தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான, திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்த நடிகை பாவனா தன் முன்னாள் கார் ட்ரைவரால் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள், நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி ஒரு குண்டை தூக்கி வீசியுள்ளார்.

ஒரு டிவி சேனலின் நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவு தலைவர் தன்னிடம் பேசிக்கொண்டிருந்தார் என்றும், கிளம்பும் போது, ‘வேறு எதுவும் இல்லையா? ‘ என்று இரட்டை அர்த்தத்தில் பேசியுள்ளார் என்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அதற்கு நிறைய வாழ்த்துக்களும், அப்படி அசிங்கமாக பேசியவர் யார் என்று சொல்லுங்கள் என்று பல ட்வீட்டுகள் வரலட்சுமிக்கு போடப்பட்டுள்ளது.

ஒரு சிலர், குறிப்பாக சரத்குமார்,’உன் துணிச்சலை நீ நிரூபித்து உள்ளாய்” என்று பாராட்டி உள்ளார். வேறு சிலர், ‘இது விளம்பரத்திற்கா?” என்றும் கேட்டுள்ளனர். அப்படி இல்லை என்றால் பேரை சொல்ல வேண்டியது தானே, அப்படி பதிவிட்டால், நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம் என்று ட்வீட்டர் மக்கள் பதிவிட்டுள்ளனர்.

இன்னும் சிலர், நீதான் தைரியமான பொண்ணாச்சே, பேரை சொல்லுன்னு மீம்ஸ் பண்ணியிருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top