நீ செய்த தியாகம்.. நட்டு நீ நல்லவன் டா! வைரலாகுது நடராஜனின் டீவீட்டுக்கு வார்னர் தட்டிய பதில்

தங்கராசு நடராஜன் இன்று சர்வதேச அளவில் பிரபலம். நடராஜனை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும் அவரின் கடின உழைப்பும், அவரது நல்ல குணாதிசயமும்.

இந்தியா – ஆஸ்திரேலியா தொடரில் பல ட்விஸ்ட் அரங்கேறியது நாம் அனைவரும் பார்த்தோம். எனினும் இந்த தொடரினை பற்றி பேசும் பொழுதெல்லம் கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாத பெயராக நடராஜன் மனதில் பதிந்து விட்டார் . நெட் பௌளராக பயணத்தை ஆரம்பித்து, ஒரே சுற்றுப்பயணத்தில் இடம்பெற்று, ஒருநாள், டி20, டெஸ்ட் என 3 பிரிவுகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தட்டி சென்றார்.

அடுத்து நடக்கும் தொடரில் இவருக்கு டீம்மில் இடம் கிடைக்கவில்லை. எனினும் அணைத்து திசைகளில் இருந்து இவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில்,” கடந்த இரண்டு மாதங்கள் என்னால் மறக்க முடியாது, டீம் இந்தியாவுடன் இறந்தது சிறந்த தருணம். டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டுமென்பது எனது கனவு. பல தடைகளை கடந்து நாங்கள் இந்த தொடரை வென்றோம். உங்களின் அளவு கடந்த ஆதரவுக்கு நன்றி.” என பதிவிட்டு இருந்தார்.

இதற்கு தான்  டேவிட் வார்னர் பதில் தட்டியுள்ளார். “சிறப்பாக செயல்பட்டாய் சாம்பியன். மிக்க மகிழ்ச்சி, அதே சமயம் உன்னை நினைத்து பெருமையாகவும் உள்ளது. சில மாதங்கள் சன் ரைஸர்ஸ் டீமுக்காக விளையாடி, பின்னர் முதல் குழந்தை பிறந்ததை கூட பார்க்க செல்லாமல் தியாகம் செய்து, அதன் பிறகு மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலும் கால்பதித்தது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. நல்ல மனிதன் நீ.”

tweet of natarajan and warner

நன்றி சகோதரா என பணிவாக பதில் தந்தார் நட்டு.