Tamil Cinema News | சினிமா செய்திகள்
கொஞ்சம் இங்க பாரு கண்ணா.! வரிசையாக தமிழில் ட்வீட் போட்ட அடுத்த CSK வீரர்.!
தற்பொழுது நாடு முழுவதும் ரசிகர்களிடையே IPL போட்டி பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கிறது, முதல் போட்டி மும்பையில் தான் தொடங்கியது, மேலும் சென்னையில் நடக்க இருந்த அனைத்து போட்டிகளும் வேற இடத்திற்கு மாற்றப்பட்டது, இது பல ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது அதேபோல் சென்னை அணியின் வீரர்களுக்கும் வருத்தத்தை கொடுத்தது இதை சமூக வலைதளத்தில் பலர் பகிர்ந்துகொண்டார்கள்.
சென்னையில் நடக்க இருந்த அனைத்து போட்டிகளும் புனேவுக்கு மாற்றப்பட்டது அதனால் போட்டியை நேரில் பார்க்க சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது, 1000 க்கும் மேற்ப்பட்ட சென்னை ரசிகரகள் நேற்று காலை சிறப்பு ரயிலின் மூலம் புனேவுக்கு சென்றார்கள்.
மேலும் இதை பற்றி சென்னை அணியில் உள்ள வேகபந்து வீச்சாளர் இம்ரான் தாகிர் தனது டிவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார்,” கொஞ்சம் இங்க பாரு கண்ணா. இது பாசத்துக்கும், அன்புக்கும் கட்டுப்பட்ட கூட்டம்.மேட்ச் புனேல இல்ல பாலைவனத்துல நடந்தாலும் இந்த கூட்டம் வரும். உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன். ரசிகர்களுக்கு சொல்லிக்கொள்வது இதுதான்: படையப்பா நாளைக்கு சீக்கிரம் முடிச்சிடு எடுட வண்டிய போடுட விசில, என கூறியுள்ளார்.
தமிழ் ஆளுங்க CSK ல இல்லன்னு வருத்தமா இருந்துச்சு ஆனா இப்போ CSK டீம் க்கு வந்ததும் எல்லாரும் தமிழ் ஆளுங்களா மாறுனத நெனைச்ச பெருமையா இருக்கு அண்ணா தட்டுறோம் தூக்குறோம்.
அன்புக்கும் பாசத்துக்கும் ஜாதி,மதம் ,மொழி எதுவுமே தடையாக இருக்க முடியாது என்னை உங்கள் சகோதரனாக ஏற்று கொண்டதில் மிக்க மகிழ்ச்சி வாழ்க தமிழ் மக்கள் வளர்க தமிழ் புகழ். யோவ். தமிழ் நாடு வீரர்கள் கூட இவ்ளோ ட்வீட் தமிழ்ல பன்னால யா.. நீயும் Bhajji ம் வந்திங்கினா எல்லா ட்வீட்ஸ்ம் தமிழ் தான்.
