ரசிகனாக வரக்கூடாது, தொண்டனாக வந்தால் போதும்! அடுக்கடுக்கான கண்டஷன் போட்ட விஜய்-யின் வலது கரம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்காக அக்கட்சித் தொண்டர்கள் கெடா விருந்து வைத்து மக்களை அழைத்துள்ளனர். அதேசமயம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முதல் மாநாட்டிற்கு வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அரசியல் களத்தில் இறங்கிவிட்டால் அதற்கு நிறைய பணம் செலவாகும். ஆளுங்கட்சிகளையும், இதற்கு முன் ஆட்சி செய்த தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சிகளையும் கட்டாயம் பகைத்துக் கொள்ள நேரிடும்! அதெல்லாம் தெரிந்துதான் செல்வாக்குள்ள நபர், துணிந்து நாட்டில் அரசியல் செய்ய முடியும்!

தமிழ் நாட்டில் அரசியல் களம் திராவிட கட்சிகளுக்கே சாதகமான இருந்தாலும், எப்படியாவதும் தங்கள் கட்சியின் ஓட்டுகளை பெரிதாக்கி, வாக்கு சதவீதத்தை அதிகரிக்க, பல்வெறு திட்டங்கள், அறிவிப்புகள், கொள்கைகள் எனப் பலவற்றையும் வாரி இறைப்பதைப் பார்த்திருப்போம்! இதெல்லாம் தெரிந்துகொண்டு தான் ஒரு படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் வரும் சினிமாவைவிட்டு மக்களுக்குச் சேவையை செய்யப் போவதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார் விஜய். இக்கட்சியின் கொடியும், கொடிப்பாடலும் அறிமுகப்பட்டு, பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்துள்ளன.

இந்த நிலையில் முதல் மாநாடு செப்டம்பர் 23 ஆம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டி அருகிலுள்ள வி.சாலை என்ற கிராமத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால், அம்மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி பிரமாண்டமாக நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு இதுவரை எந்தக் கட்சியும் இப்படி ஒரு மாநாடு நடத்தி இருக்கக் கூடாது என்பதுபோல் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தவெகவின் முதல் மாநாடு நல்லமுறையில் நடக்க வேண்டி, மதுரை கருப்பாயூரணி என்ற ஊரில், அக்கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் விஜய் அன்பன் முனியாண்டி கோவிலில் கிடா வெட்டி சிறப்பு வழிபாடு செய்தார். அவர் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாட்டில் தொண்டர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, அவர்களிடம் நீங்கள் தவெகவின் முதல் மாநாட்டிற்கு வருகை தர வேண்டும் என்று அழைத்துள்ளார்.

மேலும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முதல் மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்ய வேண்டியவை பற்றி அறிவுறுத்தியுள்ளார். அதில், ‘’தோழர்கள் மருத்து அருந்திவிட்டு மாநாடு பகுதிக்கு வரவேண்டாம்! மாநாடு நடக்கும் இடத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ரயில் தண்டவாளம், கிணறு போன்ற ஆபத்தான இடங்களில் கண்காணிப்பில் இருக்க வேண்டும்!சாலையில் போகும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதிகாரியிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும். மருத்துவக் குழு, தீயணைப்புத்துறைக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். பைக்கில் வருவோர் சாகசங்கள் செய்யக் கூடாது; காரில் தொங்கிக்கொண்டு வரக் கூடாது, பெரிய வாகனங்களில் வரும் தோழர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வர வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_img

Trending News