Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு வேளை சாப்பாடு.. ரூ 250க்காக சீரியலில் நடிக்கும் நடிகைகள்..! டிவி நடிகைகளின் மறுபக்கம்..! பரிதாபம்
சினிமா நடிகைகளின் சம்பளம் கோடிகளில் உள்ளது. ஆனால் டிவி சீரியல் நடிகைளின் சம்பளம் கூட சிலருக்கு லட்சங்களில் உயர்த்து விட்டது. சீரியலில் முதன் முதலில் ஒரு எபிசோடுக்கு ஒரு லட்சம் வாங்கியவர் நடிகை தேவயானி. அதன்பிறகு நடிகை ராதிகா, குஷ்பு ஆகியோர் வாங்குகிறார்கள்.
அடுத்த நிலையில் ரம்யாகிருஷ்ணன், சங்கவி, சோனியா அகர்வால் ஆகியோர் உள்ளனர். மேலும் 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் வாங்குபவர்களும் உள்ளனர்.
ஆனால் அக்கா,அண்ணி, சித்தி போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளின் நிலை இன்னும் பரிதாபம். ரூ 250 முதல் 300 வரை மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் குடும்ப கஷ்டம் காரணமாக ஒரு வேளை சாப்பாட்டுக்காக நடிக்கும் நடிகைகள் உள்ளனர்.
நடிகைகள் என்றாலே ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வார்கள் என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லா நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
