fbpx
Connect with us

Cinemapettai

டிவியில் நுழைந்து சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டிவியில் நுழைந்து சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்கள்

ஒரு காலத்தில் சினிமாவில் நடிப்பது என்பது பலருக்கு கனவாகவும் அந்த கனவு நிறைவேற ஆசையாகவும் இருந்துள்ளது. அப்படி கனவுடன் வந்த பலர் தற்போது சினிமாவில் காணாமல் போய்விட்டனர்.

ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தமிழ் சினிமாவில் சாதித்த ஆட்களும் உள்ளனர். சினிமாவில் இடம் கிடைக்கவில்லை என்றால் டிவியில் நுழைந்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி தற்போது வெள்ளித்திரையில் வெற்றி நாயகனாக வலம் வருகின்றனர்.

சிவகார்த்திகேயன்

போட்டியாளராக அறிமுகமாகி தொகுப்பாளராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டு தற்போது வெற்றிகரமான ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சந்தானம்

லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் டிவியில் அறிமுகமாகி வெற்றிகரமான காமெடியனாக சில காலம் சினிமாவில் வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாகவும் தன்னை நிரூபித்து வருகிறார்.

தேவதர்ஷினி

பெண் காமெடியாளர்கள் வருகை புரிந்து கொண்டிருந்த நேரத்தில் டிவியை பயன்படுத்தி சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி காமெடியனாக வளர்ந்து வருகிறார் தேவதர்ஷினி. குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

எம்எஸ் பாஸ்கர்

சினிமாவில் சாதிக்க முகம் தேவையில்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்தவர் பாஸ்கர். சன் தொலைக்காட்சியில் அறிமுகமாகி தற்போது சினிமாவில் வெற்றிகரமாக வலம் வருகிறார்.

ரோபோ சங்கர்

தன்னுடைய மிமிக்ரி நிகழ்ச்சி மூலம் டிவியில் ரசிகர்களை கவர்ந்து வெள்ளித்திரையில் சிறந்த காமெடியனாக நடித்து வருகிறார் ரோபோ ஷங்கர்.

கோவை சரளா

அந்தக்காலத்திலேயே சினிமாவுக்கு வந்து இருந்தாலும் டிவியை பயன்படுத்திதான் தற்போது முன்னணி காமெடியனாக வளர்ந்துள்ளார். இவரது நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களும் இவரது காமெடி காட்சிகளுக்காக மிகவும் ரசிக்கப்படும்.

லொள்ளு சபா மனோகர்

லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் சந்தானத்தின் உதவியால் சினிமாவில் நுழைந்து தற்போது வெற்றிகரமான காமெடியனாக நடித்து வருகிறார் லொள்ளு சபா மனோகர்.

மேலும் லொள்ளுசபா நிகழ்ச்சியிலிருந்து சுவாமிநாதன் மற்றும் ஜீவா ஆகியோரும் வெள்ளித்திரையில் ஹீரோவாகவும் காமெடியனாகவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீனா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரங்க் கால் மூலம் தமிழ் சினிமா இயக்குனர்களை கவர்ந்தவர். தற்போது வேகமாக முன்னணி காமெடியனாக வளர்ந்து வருகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top