Tamil Cinema News | சினிமா செய்திகள்
அச்சு அசல் சித்ரா போலவே மாறிய பிரபல டிவி நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்
மறைந்த பிரபல நடிகை சித்ராவை பற்றிதான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கேள்விகள் எழுந்த நிலையில் தற்போது கிடுக்கிப்பிடி விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

vjchitra-keerthana-cinemapettai
சித்ராவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் தொகுப்பாளராக வேலை செய்தாலும் நடிகையாக கிடைக்கும் வரவேற்பு எப்போதுமே கெத்து தான்.

vjchitra-keerthana-cinemapettai-01
அப்படிப்பட்ட சித்ராவை உரித்து வைத்ததை போல அச்சு அசலாக அவருடைய நடை, உடை, பாவனைகளை பிரதிபலிக்கும் விதமாக பிரபல டிவி நடிகை கீர்த்தனா என்பவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

vjchitra-keerthana-cinemapettai-02
சித்ராவின் சிரிப்பு, கோபம், சோகம், அவர் உடுத்திய உடைகள் என அனைத்துமே ஒரே மாதிரியாக இருக்கும் பல புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் கீர்த்தனா.

vjchitra-keerthana-cinemapettai-03
கீர்த்தனாவை பார்க்கும்போது மறைந்த சித்ராவை நேரடியாகப் பார்ப்பது போல இருப்பதாக ரசிகர்கள் அந்த புகைப்படங்களுக்கு இலட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

vjchitra-keerthana-cinemapettai-04
ரசிகர்கள் கவர்ந்த இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவாக இவரே நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

vjchitra-keerthana-cinemapettai-05
