விக்கிப்பீடியாவுக்கு இப்படி ஒரு சோதனையா…!தவறான தகவல்களை பதிவிடுவதா?:

விக்கிப்பீடியா என்பது பல்வேறு விதமான தகவல்களை வழங்கும் இணையதளம். இன்றைய உலகில் எந்தவொரு தகவலை பெறுவதற்கும் விக்கிப்பீடியா இன்றியமையாத ஒன்றாக களஞ்சியமாக விளங்குகிறது.

இந்நிலையில், தங்கள் நாட்டிற்கு எதிராக தவறான கருத்துக்களை பரப்புவதாக கூறி விக்கிப்பீடியாவுக்கு துருக்கி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து துருக்கி போக்குவரத்து துறை அமைச்சர் அஹ்மெத் அர்ஸ்லன் கூறுகையில், துருக்கி தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற கருத்துக்களை விக்கிப்பீடியா உருவாக்குவதாக தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக விக்கிப்பீடியா இணையதளத்தை துருக்கி அரசு முடக்கி இருந்தது. நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அர்ஸ்லன் கூறினார்..

மேலும் விக்கிப்பீடியா துருக்கியில் தனக்கென்று ஒரு அலுவலகத்தை திறக்க வேண்டும் என்றும் வரி செலுத்துவதற்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பாவின் எல்லைப் பகுதியில் வளைகுடா நாடுகளுக்கு அருகில் உள்ளது துருக்கி. இதனால் துருக்கி நாடு மேற்கு மற்றும் அரபு நாடுகளின் கலாச்சாரங்களுக்கு இடையில் சிக்கி கொண்டுள்ளது.

துருக்கியில் அவ்வவ்போது வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. மேலும் சென்ற ஆண்டு நடைபெற்ற அரசு கவிழ்ப்பு முயற்சி முக்கிய அரசியல் நிகழ்வு ஆகும்.

Comments

comments