Singapenne Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிங்கப்பெண்ணே சீரியல் கடந்த பல மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து மக்களின் பேவரைட் சீரியலாக இருந்தது. ஆனால் அன்பு தான் அழகன் என்ற உண்மையை ஆனந்தியிடம் வெளிப்படுத்தாமல் இழுத்து அடித்து வருவதால் கொஞ்சம் பார்ப்பவர்களுக்கு போரடித்து விட்டது. அது மட்டுமல்லாமல் தற்போது மகேஷ், ஆனந்தியை காதலிக்கிறார் என்ற உண்மை அன்புக்கு தெரிந்து விட்டது.
அதனால் ஆனந்திக்கு பொருத்தமான ஜோடி மகேஷ் தான் என்று முடிவு பண்ணிய அன்பு, ஆனந்தியிடம் விலகிக் கொண்டார். அத்துடன் அன்பு வேலையே வேண்டாம் என்று முடிவு பண்ணி விட்டார். ஏன் எதற்கு என்று கேள்வி கேட்ட ஆனந்தியிடம் கோபமாக பேசி வெறுப்பை சம்பாதிக்கும் அளவிற்கு அன்பு நடந்து கொண்டார்.
எதிர்பாராத பல திருப்பங்களை கொண்டு வரும் சிங்க பெண்ணே
இதனால் அன்புக்கு இருக்கும் ரசிகர்கள் அன்பு சோகமாக இருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை. அன்பு தான் ஆனந்திக்கு பொருத்தமான ஜோடியாக இருப்பார். அதனால் எப்படியாவது அவர்களை சேர்த்து வையுங்கள் என்று கமெண்ட் பண்ணி வருகிறார்கள். இது எதுவும் நடக்காத பட்சத்தில் பார்ப்பவர்களின் விறுவிறுப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வருகிறது.
ஆனால் இனி தான் இருக்கிறது என்று சொல்வதற்கு ஏற்ப சிங்கப்பெண்ணே சீரியலில் அதிரடியாக பல திருப்பங்கள் நடக்கப் போகிறது. அதாவது ஆனந்தியிடமிருந்து அன்புவை பிரிக்க வேண்டும் என்பதற்காக அன்புவின் அம்மா கொஞ்சம் கண்டிப்புடன் இருக்கிறார். அத்துடன் அன்பிற்கு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும் என்று முடிவு பண்ணி இருக்கிறார்.
இதில் அன்புக்கு விருப்பமில்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் எதுவும் மறுப்பு சொல்ல முடியாமல் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அன்புக்கு ஜோடியாக இன்னொரு கதாநாயகி என்டரி கொடுக்கப் போவதாக தகவல் வெளியாயிருக்கிறது. அவர் வேறு யாருமில்லை அன்பே வா சீரியலில் பூமிகா கேரக்டரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டெலினா டேவிஸ்.
இவர்தான் சிங்கப்பெண்ணே சீரியலில் துளசி என்ற கதாபாத்திரத்தில் வரப்போகிறார். இவர் அன்புவின் முறை பெண்ணாக நடிக்கப் போகிறார். இவருக்கும் அன்புக்கும் கல்யாணத்தை பண்ணி வைப்பதற்கு அன்புவின் அம்மா கல்யாண ஏற்பாடுகளை பண்ணப் போகிறார். இதை தெரிந்து கொண்ட ஆனந்தி மனசு சங்கடப்பட போகிறது. ஆனால் இப்பொழுது தான் ஆனந்திக்கு புரியப்போகிறது அன்பு மேல் இருப்பது காதல் என்று.
அதனால் இனி ஆனந்தி அவருடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக அன்புவை தேடி போகப் போகிறார். அழகன் யார் என்று தெரியாமலேயே அன்புவை காதலிக்க ஆரம்பித்து விட்டார் ஆனந்தி. இப்படி பல திருப்பங்களை கொண்டு அடுத்து வரும் ஒவ்வொரு காட்சிகளும் மிக விறுவிறுப்பாகவும் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கதையில் ட்விஸ்ட் வரப்போகிறது.
- ட்ரெண்டிங்கில் இருக்கும் சன் டிவியின் ஒரே ஒரு சீரியல்
- Sun Tv Serial: 1000 எபிசோடு தாண்டி முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்
- சன் டிவியில் தூள் கலப்பும் 5 சீரியல்கள்