fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

நக்கல் நையாண்டியாக வெளிவந்த துக்ளக் தர்பார் ட்ரெய்லர்.. சேட்டை பண்ணும் பார்த்திபன் மற்றும் விஜய் சேதுபதி

trailer

Videos | வீடியோக்கள்

நக்கல் நையாண்டியாக வெளிவந்த துக்ளக் தர்பார் ட்ரெய்லர்.. சேட்டை பண்ணும் பார்த்திபன் மற்றும் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வரவேற்ப்பை பெருமளவு பெற்ற நடிகர் விஜய் சேதுபதி.

சமீபகாலமாக ஹீரோவாக மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல படங்களில் நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர்களும் வில்லனாக நடித்து வருகிறார்.

தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து பட்டையை கிளப்பி வருகிறார்.

அந்த வகையில் தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி, ராசி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பார்த்திபன், சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் அரசியல் அதிரடியாக அதே சமயத்தில் கலகலப்பாகவும் வெளியாகியுள்ளது துக்ளக் தர்பார் படத்தின் ட்ரெய்லர்.

முன்னதாக துக்ளக் தர்பார் திரைப்படம் சன் டிவியில் நேரடி ஒளிபரப்பாக வெளியாக உள்ளது என ஒரு தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் துக்ளக் தர்பார் படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top