fbpx
Connect with us

Cinemapettai

சல்மானின் ‘டியூப்லைட்’ டிரைலர் வெளியீடு

News | செய்திகள்

சல்மானின் ‘டியூப்லைட்’ டிரைலர் வெளியீடு

மும்பை: சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘டியூப்லைட்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

‘பஜ்ராங்கி பாய்ஜான்’, ‘பிரேம் ரத்தன் தன் பாயோ’ மற்றும் ‘சுல்தான்’ என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் சல்மான்கான் பாக்ஸ் ஆபீஸ் ராஜாவாக திகழ்கிறார். சல்மான் கானுக்காக இயக்குனர் கபீர்கான் உருவாக்கும் கதையில், காதல், உணர்ச்சி, ஆக்ஷன், ‘சல்மான் பாய்’ ஸ்டைல் உள்ளிட்ட அனைத்தும் ஒன்று சேர்ந்து பட்டையை கிளப்புகிறது.

இயக்குனர் கபீர் கான்-சல்மான் கான் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியுள்ள ‘டியூப்லைட்’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. சுமார் 2 நிமிடம் 23 நொடிகள் கொண்ட இந்த டிரைலரில் லக்ஷ்மன் என அறிமுகமாகும் சல்மான் கான் ‘டியூப்லைட்'(புத்தி குறைவான) என செல்லமாக அழைக்கப்படுகிறார்.

சல்மானின் நிஜ சகோதரரான சோஹைல் கான், இப்படத்தில் சல்மானுக்கு சகோதரராகவும், அவரது நெருங்கிய நண்பராகவும் நடிக்கிறார். பரத் எனும் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சோஹைல் கான், வீரர்களின் வாழ்க்கை கஷ்டத்தை உணர வேண்டி இந்திய ராணுவத்தில் இணைகிறார். திருப்பமாக காணாமல்போகும் பரத் திரும்பி வரமாட்டார் என டியூப்லைட் மட்டும் ,பரத் நிச்சயம் வருவார் என நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.

இந்த டிரைலரில் இடம்பெறும் ‘கியா தும்ஹே யாக்கீன் ஹை’ வசனம் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகின்றது. சல்மான் கானின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ள இப்படம் ‘பஜ்ராங்கி பாய்ஜான்’ சாயலில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘டியூப்லைட்’ டிரைலர் வெளியாகி தற்போது வரை சுமார் 3 லட்சம் பேர் பாரவையிட்டுள்ளனர். ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ள ‘டியூப்லைட்’ திரைப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top