fbpx
Connect with us

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி டி.டி.வி தினகரன் திடீர் முடிவு..

Politics | அரசியல்

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி டி.டி.வி தினகரன் திடீர் முடிவு..

பிஜேபி மற்றும் காங்கிரஸ் மத்திய கட்சிகளை தோற்கடிப்பேன்..

டி.டி.வி.தினகரன் அதிமுகவிற்கு தற்போதைய சூழ்நிலையில் மிக டாப் கொடுக்கும் ஒரே கட்சி. உட்கட்சிப் பூசலால் வெளிவந்த தினகரன் தற்போது தனிக்கட்சி ஆரம்பித்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள அரசியல் தலைவர்களில் செய்தியாளர்களை நேருக்கு நேர் எதிர் கொள்ளும் திறமை படைத்தவர் என்று சொன்னால் தினகரன் என்று கூறலாம்.

அவர் கூட்டணி பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸுடன் எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

மாநில அளவில் ஐந்து கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் கூட்டணி பற்றி விரைவில் அறிவிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநில கட்சிகளுடன் இணைந்து பாஜக மற்றும் காங்கிரஸ் தோற்கடிப்போம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி சேர உள்ளது மற்றும் இதனுடன் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தேதியை அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top