Tamil Cinema News | சினிமா செய்திகள்
கோலிவுட்டில் 15 வருடங்களை கடந்த ஜெயம் ரவி ! வைரலாகுது ரவி – அவர் மகன் ஆரவ்வின் போட்டோ !

ஜெயம் ரவி
ஜெயம் படம் ரிலீசாகி நேற்றோடு 15 வருடங்கள் முடிவடைகிறது. இதுவே ஜெயம் ரவிக்கு மகிழ்ச்சி என்றால், இன்று அவர் மகன் நடிப்பில் “டிக் டிக் டிக்” படம் ரிலீஸாவதால் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளார் அவர்.
டிக் டிக் டிக்
முழுக்க முழுக்க விண்வெளியைக் கதைக் களமாகக் கொண்டு இந்தியாவில் வெளியாகும் முதல் படம். சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கிறார். நிவேதா பெத்துராஜ் நாயகியாக வலம் வருகிறார்.ஜெயம் ரவியின் மகன் ஆரவ் முக்கிய ரோலில் நடித்துள்ளார். ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் இமானுக்கு 100-வது படம். இப்படத்தை நேமிசந்த் ஜபக் சார்பில் வி.ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கிறார்.

Jayam Ravi – Arav
மிகுந்த எதிர்பார்ப்புள்ள இப்படத்திற்கும், அறிமுகமாகும் ஆரவிற்கும் பல செலிபிரிட்டிகள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
