Connect with us
boomerang-movie

இயக்குனர் கௌதமனை கொல்ல முயற்சி! காரணம் குறித்து போலீஸ் விசாரணை

V-Gowthaman

இயக்குனர் கௌதமனை கொல்ல முயற்சி! காரணம் குறித்து போலீஸ் விசாரணை

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இயக்குனர் கௌதமனை கொல்ல முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இயக்குனர் கௌதமன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். தமிழர்களின் நலனுக்காக மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தி வருகிறார். தற்போது டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் இளைஞர்களை வைத்து போராட்டம் நடத்தினார்.

மேலும், கிண்டி மேம்பாலத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு புழல் சிறைக்கு சென்றார். இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் சென்று கொண்டிருந்த போது கௌதமனை இரண்டு பேர் கார் ஏற்றி கொல்ல முயற்சி செய்துள்ளனர். இதன் காரணமாக கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் கௌதமன் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரின் கௌதமனை கொலை செய்ய முயற்சித்த சிவா மற்றும் கெவின் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இந்த கொலை முயற்சிக்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top