Connect with us
Cinemapettai

Cinemapettai

ஓடும் காரில் கற்பழிப்பு முயற்சி! நடிகர், டைரக்டர் அட்டூழியம்..!!!!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஓடும் காரில் கற்பழிப்பு முயற்சி! நடிகர், டைரக்டர் அட்டூழியம்..!!!!

கேரளாவில் சில மாதங்களுக்கு முன்னர் பிரபல நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவு செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த சம்பவம் மறைவதற்குள் மேலும் ஒரு சம்பவம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் நடந்துள்ளது.

வளர்ந்து வரும் இளம் தெலுங்கு நடிகை ஒருவர் விஜயவாடா காவல் நிலையத்தில் இயக்குனர் சலபதி மற்றும் நடிகர் ஸ்ருஜன் ஆகியோர் மீது புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர்கள் இருவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். நடிகை தனது புகாரில், படப்பிடிப்புக்காக பீமாவரம் செல்ல வேண்டியிருந்தது. அப்போது நான் ரயிலில் வருகிறேன் என கூறினேன்.

அதற்கு நடிகர் ஸ்ருஜன் மற்றும் இயக்குனர் சலபதி ஆகியோர் இல்லை காரில் வாருங்கள் என அழைத்து சென்றனர். அது இரவு நேரம்… போகும் வழியில் பின் சீட்டில் நான் உட்கார்ந்து இருந்தேன். அருகே நடிகரும் இருந்தார். முன் சீட்டில் இருந்த இயக்குநர் பின்சீட்டிற்கு தாவினார்.

அப்போது அவர்கள் காரை வேகமாக ஓட்டச்சொல்லி விட்டு காரில் வைத்து என்னை பலாத்காரம் செய்ய முயற்சித்தார்கள். இதனை யாரிடமாவது சொன்னால் உன் வாழ்க்கையே காலி, பட வாய்ப்பே வராமல் செய்துவிடுவோம் என மிரட்டினார்கள். அவர்களிடமிருந்து எப்படியோ தப்பித்து காவல் நிலையம் வந்தேன் என கூறியுள்ளார் அந்த நடிகை. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாத போலீசார் அந்த இயக்குனரை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top