திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பல நெகடிவ் விமர்சனங்கள், கிசுகிசுக்கள் என்று ஏராளமாக வெளிவந்திருக்கிறது. அப்படி அவரைப் பற்றி வெளிவந்த ஒரு தகவல் தான் அவருக்கும், எம்ஜிஆருக்கும் இடையே மிகப்பெரிய மனஸ்தாபம் இருக்கிறது என்பது.
எம்ஜிஆர் ரஜினியை மிரட்டினார், அடித்தார், அவமதித்துள்ளார் என்றெல்லாம் பல செய்திகள் அப்போது ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை கிளப்பியது. ஆனால் சொல்லப் போனால் அந்த தகவல்கள் எதுவும் உண்மை இல்லை. அவருக்கும், ரஜினிக்கும் இடையே ஒரு நெருங்கிய பந்தம் இருக்கிறது.
எம்ஜிஆர் வீட்டில் எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அங்கு முதலில் செல்வது ரஜினி மட்டும்தான். அதோடு அவருடைய வீட்டில் நடக்கும் அனைத்து சுபகாரிய விழாவுக்கும் முதல் அழைப்பிதழ் ரஜினிக்குத்தான் செல்லும் என்பது பலரும் அறியாத விஷயம்.
அதுமட்டுமல்லாமல் எம்ஜிஆரின் வீட்டில் அதிக முறை சாப்பிட்ட நபர் யார் என்று கேட்டால் அது ரஜினியாக மட்டும்தான் இருக்க முடியும். அவருக்கு எம்ஜியார் ஒரு கார்டியன் போன்று செயல்பட்டு வந்துள்ளார். அவர் ரஜினிக்கு பல நல்ல விஷயங்களை பற்றியும் கூறுவாராம்.
சில சமயங்களில் அவர் கண்டிப்புடன், கோபமாக நடந்து கொண்டதும் உண்டு. ஆனால் அவையெல்லாம் ரஜினியை அவமதிக்கும் நோக்கத்தில் கிடையாது அவருடைய நல்லதுக்காக மட்டும்தான். அவர் சினிமாவில் பல உயரங்களை அடைய வேண்டும் என்பதுதான் எம்ஜிஆரின் ஆசை.
அதேபோன்று எம்ஜிஆர் எது சொன்னாலும் அதன் படி கேட்டு நடந்து கொள்ளும் நபராக ரஜினி இருந்துள்ளார். ஆனால் இந்த தகவல் ஊடகங்களில் பல கட்டுக்கதைகள் உடன் வெளிவந்து அவர்கள் இருவருக்கும் இடையே மிகப்பெரிய பிரச்சினை இருப்பது போல் காட்டி விட்டது.