Tamil Cinema News | சினிமா செய்திகள்
TRP ரேட்டிங்கில் மண்ணை கவ்வும் விஜய் டிவி.. இருங்கடா பிக் பாஸ் வரட்டும் துவம்சம் பண்றோம்
தனியார் தொலைக்காட்சிகள் தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை அதிகப்படுத்துவதற்காக சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை ஒளி பரப்புவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
கொரோனா லாக்டவுன் தீவிரமாக அமலில் இருந்த காலகட்டத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு டிஆர்பி ரேட்டிங் விறுவிறுன்னு ஏறுவதற்கு காரணமாக இருக்கும் சீரியல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.
அதன்பின் ஒரு சில கட்டுப்பாடுடன் கூடிய தளர்வுக்கு பின்பு சீரியல்கள் மறுபடியும் ஒளிபரப்பானது. இருந்த போதிலும் சீரியல் நடிகை நடிகைகள் வெளிமாநிலத்தில் மாட்டிக்கொண்டு படப்பிடிப்பிற்கு வர முடியாத சூழ்நிலையால் அவர்கள் சீரியலில் இருந்து வேறு வழி இல்லாமல் தூக்கி எறியப்பட்டன.
இதனால் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த சீரியல்கள் எல்லாம் தற்போது சுவாரசியம் குறைந்து மக்கள் மத்தியில் அந்த அளவுக்கு வரவேற்பு பெற முடியவில்லை.
விஜய் டிவியின் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் கதையின் போக்கையே திசை திருப்பியும், ரொம்ப நல்லா நடித்துக்கொண்டிருந்த நடிகர் நடிகைகளை மாற்றியதாலும், வெறும் 448388 பார்வையாளர்களை பெற்று, சென்ற வாரம் டிஆர்பி ரேட்டிங் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது விஜய் டிவி.
அதே போல் தான் மற்ற சீரியல்களுக்கு எல்லாம் கடும் போட்டியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஜீதமிழ் தொலைக்காட்சியின் ‘செம்பருத்தி’ சீரியலில் பல புதுமுகங்களை இறக்கி, அந்த நாடகத்தின் சுவாரசியத்தை குறைத்துவிட்டதால், 467926 பார்வையாளர்களை மட்டுமே பெற்று TRP ரேட்டிங் இரண்டாவது இடத்திற்கு சென்றுவிட்டது.
சன் டிவியில் முன்னணி சீரியலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ரோஜா, நாயகி, போன்ற விருவிருப்பான தொடர்கள் அனைத்தும் தற்போது கலை இழந்து போயிருச்சு, இருப்பினும் 835106 பார்வையாளர்களுடன் TRP ரேட்டிங் முதலிடத்தில் உள்ளது. இப்படி டிஆர்பி ரேட்டிங் குறைவதற்கு காரணம் தெரிஞ்சும் என்ன செய்றதுன்னு தெரியாம விழிபிதுங்கி நிற்கின்றனர் தனியார் தொலைக்காட்சியின் நிர்வாகிகள்.
