fbpx
Connect with us

Cinemapettai

கடைசி நேரத்தில் காலை வாரிய துட்டு பார்ட்டிகள்.. நெருக்கடியில் தவிக்கும் மணிரத்னம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கடைசி நேரத்தில் காலை வாரிய துட்டு பார்ட்டிகள்.. நெருக்கடியில் தவிக்கும் மணிரத்னம்

தமிழ் சினிமாவில் அதிக அளவு படங்களை எடுக்கவில்லை என்றாலும் சில இயக்குனர்கள் தாங்கள் எடுத்த பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக கொடுத்து ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளார்கள். அதில் காதலை வித்தியாச வித்தியாசமான கோணத்தில் யோசித்து ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் மணிரத்னம்.

அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை அந்த மணிரத்னம் படங்களுக்கு எப்போதுமே எதிர்பார்ப்புகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன அது மட்டுமல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் எப்படி லாபம் ஈட்டுவது என தெளிவாக தெரிந்த இயக்குனர்.

மணிரத்னம் தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். கொரானா பாதிப்பால் அதன் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் பலரும் தற்போது வட்டி மேல் வட்டி கட்டி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.

இதனால் இயக்குனர் டைரக்ட் செய்து கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட்டை குறைக்குமாறு தயாரிப்பாளர் கண்டிஷன் போட்டுள்ளாராம். ஏற்கனவே அந்த படத்திற்கு முடிந்த அளவு குறைந்த பட்ஜெட் தான் போட்டு கொடுத்திருக்கிறேன் எனவும் இதற்கு மேல் குறைத்தால் படத்தில் குவாலிட்டி இருக்காது எனவும் கூறுகிறாராம் அந்த இயக்குனர்.

தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துடன் மற்றொரு நிறுவனத்தை சேர்த்து தயாரிப்பதால் தான் இவ்வளவு பிரச்சனை என்று யோசிக்கிறாராம் அந்த இயக்குனர். அதுமட்டுமல்லாமல் இணை தயாரிப்பாளர் வட்டி அதிகம் ஆகிறது என இயக்குனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே பாதி சூட்டிங் முடிந்து விட்ட நிலையில் கடைசி நேரத்தில் தவறினால் சரி இருக்காது என பட்ஜெட்டை குறைக்கும் வேலையில் வேலையில் இறங்கிவிட்டாராம் கிளாசிக் இயக்குனர் மணிரத்னம்.

Continue Reading
To Top