தமிழ் திரையுலகில் வினியோகஸ்தர்கள் நஷ்டமடைந்தால் அவர்களுக்கு நஷ்ட ஈடுத் தொகை கொடுக்கும் பழக்கத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்பித்து வைத்தார்.

நல்ல எண்ணத்தில் அவர் ஆரம்பித்த அந்த விஷயம் பின் அவருக்கே எதிராக அமைந்தது. இந்த பழக்கத்தை அதன் பின், மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் நஷ்டமடைந்தவர்கள் பரப்பி வைத்தார்கள்.மேலும் சில ஹீரோக்கள் இதை வெளியில் தெரியாமல் செய்தார்கள். சில நாட்களுக்கு முன் சில ஹீரோக்களுக்கு எதிராக ‘ரெட்’ போடப்பட்டது என தகவல் பரவியது. அதன்பின் அது அப்படியே அமுங்கிப் போனது என நினைக்க, வினியோகஸ்தர்கள் தரப்பில் கிடப்பில் போடவில்லை என்வும், நஷ்ட ஈடு விவகாரம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது என்கிறார்கள்.

அதன்படி விஜய் நடித்த ‘பைரவா’ படம் சந்தித்த நஷ்டத்தை ஈடு செய்ய ரூ. 5 கோடி கொடுத்தால்தான் அவருடைய அடுத்த படத்தையும், சூர்யாவின் ‘சி-3’ சந்தித்த நஷ்டத்தை ஈடு செய்ய ரூ. 10 கோடி கொடுத்தால் தான் அவருடைய அடுத்த படத்தையும் விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறுவதாக தெரிகிறது. இதோ போல ‘போகன்’ (ரூ. 6 கோடி) ஜெயம் ரவி அடுத்த படத்தையும் வெளியிட முடியும் என்கிறார்கள். இதில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், கார்த்தி உள்ளிட்டோரும் இருப்பதாகச் தெரிகிறது.

விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னணி நடிகர்களுக்கு எதிராக இப்படி ஒரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விஷால் நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என ஆவலுடன் திரையுலகத்தினர் காத்திருக்கிறார்கள். விஷாலுக்கு பல நெருக்கடிகளை கொடுக்க தோல்வியை சந்தித்தவர்கள் தயாராகி வருவதாக ஒரு தகவல் உலா வருகிறது.